Header Ads



142 மில்லியன் கடனை செலுத்தாத மஹிந்த - பாய்ந்தது வழக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபையிடம் இருந்து பெற்று கொள்ளப்பட்ட பேருந்துகளுக்கு செலுத்த வேண்டிய 142 மில்லியன் ரூபா பணத்தினை செலுத்தாத காரணத்தினாலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த வழக்கு மே மாதம் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.