உம்ராவை நிறைவேற்றிய பின், மனதின் சுமை இறங்கியுள்ளது - ஹசன் அலி
இன்றைய காலகட்டத்தில் கிழக்கில் முஸ்லிம் கூட்டு முன்னணி ஒன்று அவசியம் தேவை. ஆனால் அக்கூட்டு முன்னணியில் நான் இணைந்து கொள்வது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை.
இதேவேளை முஸ்லிம்களுக்கு கரையோர மாவட்ட கோரிக்கையை மையப்படுத்தி உருவாகும் எந்த அரசியல் அமைப்புடனும் இணைந்து கொள்ளத் தயாராக இருக்கின்றேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கிழக்கில் முஸ்லிம் கூட்டு முன்னணி ஒன்றினை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அது தொடர்பாக கருத்து வினவிய போதே ஹசன்அலி இவ்வாறு தெரிவித்தார்.”
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் முஸ்லிம் கூட்டு முன்னணியின் கொள்கைகள் என்ன? எந்த நோக்கோடு இந்த முன்னணி ஆரம்பிக்கப்படுகின்றது. எனும் விபரங்களில் தெளிவு பெற்றுக்கொண்ட பின்பே அதில் இணைந்து கொள்வதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும்
புதிதாக உருவாகும் முஸ்லிம் முன்னணிகள் முஸ்லிம்களுக்கு தனித்துவமான கரையோர மாவட்ட கோரிக்கையை முதன்மையாகக் கொள்ள வேண்டும். இதுவரை காலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கரையோர மாவட்ட கோரிக்கைக்கு குரல் கொடுத்து வந்தாலும், அண்மையில் நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இக் கொள்கை உள்வாங்கப்படவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
கிழக்கில் முஸ்லிம் கூட்டு முன்னணியைப் பற்றி தற்போது மக்களும் பேசுகிறார்கள். இம் முன்னணியைப் பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகளும் முக்கியம் கொடுத்து விமர்சிக்கிறார்கள்.
எனவே இது அர்த்தபுஷ்டியான ஏற்பாடு என்றே எண்ணத் தோன்றுகின்றது.
உம்ரா கடமையை நிறைவேற்றிய பின் எனது மனதின் சுமை இறங்கியுள்ளது.
மிகவும் தெளிவாக இருக்கின்றேன். எனவே எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறேன். இன்று முஸ்லிம் அரசியல் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் ஓர் ஸ்திரத்தன்மையை அடைய வேண்டும் என்றார்.
ARA.Fareel

Adutha post a thedi ponga boss...samooham samooham enru pazaviya thedunga
ReplyDeleteMuslims by Name BUT Keeps dividing in the name of religion and politics. Eventually will end up with Enmity and Broken Unity.
ReplyDeleteBUT Whoever follow Islam not by name but by acting upon the teaching of Muhammed (sal) will not create division among Muslim by the name of religion or worldly politics.
May Allah Guide to get united in Holding to the Rope of Allah
( The Rope = Al Quran and Sahee Hadees )
( Holding = should be in the way of Sahaaba, tabieen and taba tabieen
கட்டணம் செலுத்தப்படாத விளம்பரமே இது.
ReplyDeleteஹஸன் அலிதான் முஸ்லிம் கூட்டமைப்புக்கு தலைமை தாங்க மிகப் பொருத்தமானவர்.
ReplyDeleteமர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுக்குப் பின் முஸ்லிம் காங்ரஸ் ஒரு சமூக அரசியல் இயக்கமாக் திகழ்வதற்கு பேரும் பங்களிப்புச் செய்தவர் ஹஸன் அலி என்றால் அது மிகையாகாது.அவர் ஒருசராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால் அரசியலில் எவ்வளவோ உயர்ந்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் சிந்திப்பவரல்ல.அவர் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றப்பாட்டினை மிக ஆழமாகப் புரிந்தவர் என்றவகையில் சில சராசரியான அரசியல் நிலைப்பாடுகளில் அவரால் சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. அந்தக்காரணிகள்தான் அவரை ரஊப் ஹக்கீமிடமிருந்து அவரை முரண்படச் செய்தது. உதாரணமாக ஐ.நா வுக்கு முஸ்லிம்களின் பாதிப்புகள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பித்தமை.மஹிந்தவிடம் இருந்து பிரியவேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருந்தமை என்பவைகளைக் கூறலாம். இன்னும் அஸ்ரபின் கனவுகளில் விடாப்பிடியாக இருந்து கொண்டு அவ்வப்போது அவைகளை உரக்கப் பேசியவர்களுள் முதன்மையானவரும் அவர்தான்.அவைகளில் ரஊப் ஹக்கீமை விட உறுதியான கொள்கையுடையவராகவும் ,அவைகள் தொடர்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிறர் சரிகாணும் வகையில் தர்க்க ரீதியாக பதிலளிக்கக்கூடியவாறும் அவர் திகழ்கிறார். அவ்வாறான ஒருவர் தேசியப்பட்டியலுக்காகத்தான் முரண்படுகிறார் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான வாதமாகும். மேற்கூறிய காரணங்களால் ரஊப் ஹக்கீமிடமிருந்து துாரமாகிய ஹஸன் அலி அவர்கள் கிழக்கின் எழுச்சிற்கு ஆதரவு வழங்கியமையே அவரது செயலாளர் பதவியை குறைப்புச் செய்து பின் முற்றாக இல்லாமல் ஆக்கியது என்பது தர்க்க ரீதியாக சிந்திக்கும்போது கிடைக்கும் உண்மையாகும்.ஆக நியாயமான காரணமின்றி சமூக அக்கறையினால் தலைமைத்துவத்திலுள்ளவரோடு கொண்ட முரண்பாடுகளால் அநியாயமாக திட்டமிடப்பட்டு பதவி இழக்கச் செய்யப்பட்டமையால் அதே சமூக அக்கறையைக் காரணமாக் கொண்டும் மேலும் ஏணையவர்களோடு ஒப்பிடுகின்ற போது மூத்த கட்சிக் கொள்கைவாதி என்ற அடிப்படையிலும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புக்கு ஹஸன் அலி அவர்களை தலைவராக நியமிப்பதே சாலப் பொருத்தமானதாகும்.
neenkalum muslim makkalukku nadanthaiya. unnkala yaru kawalai padaporanka . unkala kanakkule edukka maadanaka
ReplyDelete