Header Ads



உம்ராவை நிறை­வேற்­றிய பின், மனதின் சுமை இறங்­கி­யுள்­ளது - ஹசன் அலி

இன்­றைய கால­கட்­டத்தில் கிழக்கில் முஸ்லிம் கூட்டு முன்­னணி ஒன்று அவ­சியம் தேவை. ஆனால் அக்­கூட்டு முன்­ன­ணியில் நான் இணைந்து கொள்­வது பற்றி இன்னும் தீர்­மா­னிக்­க­வில்லை.

இதே­வேளை முஸ்­லிம்­க­ளுக்கு கரை­யோர மாவட்ட கோரிக்­கையை மையப்­ப­டுத்தி உரு­வாகும் எந்த அர­சியல் அமைப்­பு­டனும் இணைந்து கொள்ளத் தயா­ராக இருக்­கின்றேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாய­கமும் முன்னாள் இரா­ஜங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பத­வி­யி­லி­ருந்து இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் அமைச்சர்  பஷீர் சேகு­தாவூத் கிழக்கில் முஸ்லிம் கூட்டு முன்­னணி ஒன்­றினை உரு­வாக்­கு­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு வரு­கின்ற நிலையில் அது தொடர்­பாக கருத்து வின­விய போதே ஹசன்­அலி இவ்­வாறு தெரி­வித்தார்.”

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் முஸ்லிம் கூட்டு முன்­ன­ணியின் கொள்­கைகள் என்ன? எந்த நோக்­கோடு இந்த முன்­னணி ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றது. எனும் விப­ரங்­களில் தெளிவு பெற்­றுக்­கொண்ட பின்பே அதில் இணைந்து கொள்­வதா இல்­லையா என்­ப­தனை தீர்­மா­னிக்க முடியும் 

புதி­தாக உரு­வாகும் முஸ்லிம் முன்­ன­ணிகள் முஸ்­லிம்­க­ளுக்கு தனித்­து­வ­மான கரை­யோர மாவட்ட கோரிக்­கையை முதன்­மை­யாகக் கொள்ள வேண்டும். இது­வரை காலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கரை­யோர மாவட்ட கோரிக்­கைக்கு குரல் கொடுத்து வந்­தாலும், அண்­மையில் நடை­பெற்ற கட்­சியின் பேராளர் மாநாட்டில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களில் இக் கொள்கை உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. இது மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

கிழக்கில் முஸ்லிம் கூட்டு முன்­ன­ணியைப் பற்றி தற்­போது மக்­களும் பேசு­கி­றார்கள். இம் முன்­ன­ணியைப் பற்றி முஸ்லிம் அர­சியல்வாதி­களும் முக்­கியம் கொடுத்து விமர்­சிக்­கி­றார்கள்.

எனவே இது அர்த்­த­புஷ்­டி­யான ஏற்­பாடு என்றே எண்ணத் தோன்­று­கின்­றது.

உம்ரா கட­மையை நிறை­வேற்­றிய பின் எனது மனதின் சுமை இறங்­கி­யுள்­ளது.

மிகவும் தெளி­வாக இருக்­கின்றேன். எனவே எதிர்­கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறேன். இன்று முஸ்லிம் அரசியல் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் ஓர் ஸ்திரத்தன்மையை அடைய வேண்டும் என்றார்.

ARA.Fareel

5 comments:

  1. Adutha post a thedi ponga boss...samooham samooham enru pazaviya thedunga

    ReplyDelete
  2. Muslims by Name BUT Keeps dividing in the name of religion and politics. Eventually will end up with Enmity and Broken Unity.

    BUT Whoever follow Islam not by name but by acting upon the teaching of Muhammed (sal) will not create division among Muslim by the name of religion or worldly politics.

    May Allah Guide to get united in Holding to the Rope of Allah
    ( The Rope = Al Quran and Sahee Hadees )
    ( Holding = should be in the way of Sahaaba, tabieen and taba tabieen

    ReplyDelete
  3. கட்டணம் செலுத்தப்படாத விளம்பரமே இது.

    ReplyDelete
  4. ஹஸன் அலிதான் முஸ்லிம் கூட்டமைப்புக்கு தலைமை தாங்க மிகப் பொருத்தமானவர்.

    மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுக்குப் பின் முஸ்லிம் காங்ரஸ் ஒரு சமூக அரசியல் இயக்கமாக் திகழ்வதற்கு பேரும் பங்களிப்புச் செய்தவர் ஹஸன் அலி என்றால் அது மிகையாகாது.அவர் ஒருசராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால் அரசியலில் எவ்வளவோ உயர்ந்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் சிந்திப்பவரல்ல.அவர் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றப்பாட்டினை மிக ஆழமாகப் புரிந்தவர் என்றவகையில் சில சராசரியான அரசியல் நிலைப்பாடுகளில் அவரால் சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. அந்தக்காரணிகள்தான் அவரை ரஊப் ஹக்கீமிடமிருந்து அவரை முரண்படச் செய்தது. உதாரணமாக ஐ.நா வுக்கு முஸ்லிம்களின் பாதிப்புகள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பித்தமை.மஹிந்தவிடம் இருந்து பிரியவேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருந்தமை என்பவைகளைக் கூறலாம். இன்னும் அஸ்ரபின் கனவுகளில் விடாப்பிடியாக இருந்து கொண்டு அவ்வப்போது அவைகளை உரக்கப் பேசியவர்களுள் முதன்மையானவரும் அவர்தான்.அவைகளில் ரஊப் ஹக்கீமை விட உறுதியான கொள்கையுடையவராகவும் ,அவைகள் தொடர்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிறர் சரிகாணும் வகையில் தர்க்க ரீதியாக பதிலளிக்கக்கூடியவாறும் அவர் திகழ்கிறார். அவ்வாறான ஒருவர் தேசியப்பட்டியலுக்காகத்தான் முரண்படுகிறார் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான வாதமாகும். மேற்கூறிய காரணங்களால் ரஊப் ஹக்கீமிடமிருந்து துாரமாகிய ஹஸன் அலி அவர்கள் கிழக்கின் எழுச்சிற்கு ஆதரவு வழங்கியமையே அவரது செயலாளர் பதவியை குறைப்புச் செய்து பின் முற்றாக இல்லாமல் ஆக்கியது என்பது தர்க்க ரீதியாக சிந்திக்கும்போது கிடைக்கும் உண்மையாகும்.ஆக நியாயமான காரணமின்றி சமூக அக்கறையினால் தலைமைத்துவத்திலுள்ளவரோடு கொண்ட முரண்பாடுகளால் அநியாயமாக திட்டமிடப்பட்டு பதவி இழக்கச் செய்யப்பட்டமையால் அதே சமூக அக்கறையைக் காரணமாக் கொண்டும் மேலும் ஏணையவர்களோடு ஒப்பிடுகின்ற போது மூத்த கட்சிக் கொள்கைவாதி என்ற அடிப்படையிலும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புக்கு ஹஸன் அலி அவர்களை தலைவராக நியமிப்பதே சாலப் பொருத்தமானதாகும்.

    ReplyDelete
  5. neenkalum muslim makkalukku nadanthaiya. unnkala yaru kawalai padaporanka . unkala kanakkule edukka maadanaka

    ReplyDelete

Powered by Blogger.