Header Ads



குர்ஆனை எரித்தவவருக்கு மதநிந்தனை குற்றச்சாட்டு - டென்மார்க்கில் சம்பவம்


புனித குர்ஆனை எரித்த டென்மார்க் நாட்டவர் ஒருவருக்கு மதநிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. டென்மார்க்கில் கடந்த அரை நூற்றாண்டில் மத நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இது முதல் முறையாகும்.

42 வயதான நபர் தனது முற்றவெளியில் குர்ஆனை தீமூட்டி அதனை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்டிருப்பதாக தலைமை அரச வழக்கறிஞர் ஜான் ரெக்கன்டோப் குறிப்பிட்டார்.

டென்மார்க்கியில் மத நிந்தனை சட்டம் கொண்டுவரப்பட்ட பின் வரலாற்றில் அவ்வாறானதோரு குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இது நான்காவது தடவையாகும்.

புனித நூல்களான குர்ஆன் அல்லது பைபிளை எரிப்பது மத வெறுப்பு மற்றும் கேலிசெய்வதாக இருக்கும் நிலையில் அது ஒரு குற்றவியல் சட்டத்தை மீறும் செயல் என்று அரச வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சட்டத்தை பயன்படுத்தி 1938 மற்றும் 1946 இல் இடம்பெற்ற இரு சம்பவங்களிலேயே குற்றங்காணப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு ஒருவர் மீது மதநிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோதும் அவர் குற்றங்காணப்படவில்லை.

எனினும் மதநிந்தனை குற்றத்திற்கு டென்மார்க்கில் அதிகபட்ச சிறை தண்டனை நான்கு மாதங்களாகும். ஆனால் குறித்த நபர் குற்றங்காணப்படும் பட்சத்தில் அவருக்கு அபராதம் மாத்திரமே விதிக்கப்படும் என்று ரெக்கன்டோப் கூறினார். 

No comments

Powered by Blogger.