Header Ads



ஹெல உறுமய தொடர்பிலான, பல உண்மைகளை அம்பலப்படுத்துவேன் - அதுரலிய தேரர்


அரசாங்கத்திற்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் இடையிலான சகல இரகசியங்களும் அம்பலப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றில் சுயாதீனமான நாடாளுமன்ற உறுப்பினராக அமர்வுதற்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தின.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.

நாட்டை மீளவும் கட்டியெழுப்ப முடியாத வகையில் நாடு சீரழிந்து செல்கின்றது.

இந்த நிலைமையின் கீழ் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் ஏற்றிய தரப்புக்கள் தொடர்ந்தும் அமைதி பேண முடியாது.

ஜாதிக ஹெல உறுமய என் மீது சுமத்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான பல உண்மைகளை அம்பலப்படுத்துவேன்.

எதிர்வரும் நாட்களில் இந்த உண்மைகள் அம்பலப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.