Header Ads



அல்லாஹ்வின் படைப்புகளின் நலனுக்காக, நிறைய மரங்களை நடுங்கள் - தலிபான் தலைவர்

ஆஃப்கானியர்கள் நிறைய மரங்களை நட வேண்டும் என்று அந்நாட்டின் தாலிபன் அமைப்பின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸதா வலியுறுத்தி உள்ளார்.

பொதுமக்கள் மற்றும் போராளிகள் ஒன்று அல்லது பல பழம் தரும் மரங்களை அல்லது பழம் தராத மரங்களை பூமியை அழகுபடுத்தும் நோக்கிலும், அல்லாவின் படைப்புகளின் நலனுக்காகவும் நிறைய நட வேண்டும் என்று அறிக்கை ஒன்றின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

காடுகள் அழிப்பு பிரச்சனையால் ஆஃப்கானிஸ்தான் கடும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.

எரிப்பதற்கும், சட்டவிரோத விற்பனைக்கும் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் குறித்து தாலிபன் அமைப்பிடமிருந்து அறிக்கைகள் வருவது மிகவும் அரிதான ஒன்று.

கடந்தாண்டு மே மாதம் தாலிபன் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அகுந்தஸதா, ராணுவ தளபதி என்பதை காட்டிலும் மத தலைவராக மிகுந்த வலுவான நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Should have said 40 years ago. Deelayed wisdom?

    ReplyDelete
  2. யுவான் ரிட்லி என்ற புகழ் பெற்ற பெண் பத்திரிகையாளர் தலிபான்களின் பிடியிலிருந்த வெளிவந்த போது இஸ்லாமியத் பெண்ணாக மாறினார். இதற்கான காரணம் என்ன என்ற கேள்வி என்னுள் எழுகிறது . தெரிந்தவர்கள் கூறவும்.

    ReplyDelete

Powered by Blogger.