Header Ads



ஈரானியர்கள் அழுவதற்கு பதிலாக, சிரிப்பதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்


இரான் அதிபர் ஹசன் ரூஹானி இந்த ஆண்டு நடைபெறும் மறுதேர்தலில் போட்டியிடுவார் என்பதற்கான அறிகுறிகள் ஆழமாகத் தெரியும் நிலையில், இரானியர்கள் வாழ்க்கையை அனுபவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரானிய புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இரானியர்கள் அழுவதற்கு பதிலாக சிரிப்பதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தொலைக்காட்சி நேரலையில் ரூஹானி உரையாற்றினார்.

உயர் அந்தஸ்து கொண்ட கடும்போக்குவாதிகளை மறைமுகமாக விமர்சித்த ரூஹானி, தன்னுடைய அரசாங்கம் வெளியுலகிற்கு இரானை திறந்துவிட உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அதே சமயம், ரூஹானியின் உயர்மட்ட உதவியாளர் ஒருவர் கூறுகையில், ரூஹானி இரண்டாவது முறையாக மே மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.