Header Ads



மஹிந்த சார்பு நுகே­கொ­டை பேர­ணி­க்கு வருமாறு, முஸ்லிம்களுக்கு அழைப்பு

இன்று அபா­யத்தில் சிக்­கி­யி­ருக்கும் ஜன­நா­ய­கத்தைக் காப்­பாற்­று­வ­தற்கு இந்­நாட்டு முஸ்­லிம்கள் முன்­வ­ரு­வது தலை­யாய கட­மை­யாகும். இந் நாட்டின் ஜன­நா­ய­கத்தை பாது­காப்­பது முன்­னைய காலத்தை விட இன்று மிகவும் தேவைப்­பா­டாக உள்­ளது.

ஆரம்பம் முதல் மார்க்­கத்தின் அடிப்­ப­டையில், ஜன­நா­யக வழி முறையில்  வாழ்ந்­த­வர்கள் முஸ்­லிம்கள் என்­பதை வர­லாறு தெளி­வாகக் கூறு­கி­றது என முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­பரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரி­வித்தார்.

பத்­த­ர­முல்லை நெலும் பொக்­குன மாவத்­தையில் அமைந்­துள்ள முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் காரி­யா­ல­யத்தில்  நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மா நாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,  

நாட்டில் ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்­ப­தற்கும் மக்கள் நல­வு­ரி­மை­களை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கு­மாக வேண்டி எதிர்­வரும் 27 ஆம் திகதி நுகே­கொ­டையில் மக்கள் பேர­ணி­யொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இப்­பே­ர­ணியில் முஸ்­லிம்கள் கலந்து கொள்ள வேண்­டு­மென முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி வேண்­டுகோள் விடுக்­கி­றது.

இதே­வேளை, முஸ்­லிம்­களின் முதல் கிப்­லா­வான அல்­அக்­ஸாவின் பூமியில் அமெ­ரிக்கா ஜெரு­சலம் நகரைக் கைப்­பற்றி இஸ்ரேலை தலை­ந­க­ராக்கிக் கொள்ளும் முயற்­சி­களில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­மையை முஸ்லிம் உலகம் பல­மாகக் கண்­டிக்­கி­றது. கடந்த 40 வருட கால­மாக அமெ­ரிக்க சியோ­னி­ச­வா­திகள் இஸ்ரேலை காப்­ப­தற்கு எடுத்து வந்த முயற்­சி­களின் இறுதிக் கட்­ட­மாக இதனை நாம் கருத வேண்­டி­யுள்­ளது.

அல்­அக்­ஸாவைப் பறி­கொ­டுக்க முடி­யாது. எனவே ஜெரு­ச­லத்தை சிதைக்கும் வகையில் அமெ­ரிக்க தூது­வ­ரா­ல­யத்தை அங்கு அமைப்­ப­தற்கு ட்ரம்ப் எடுத்து வரும் முயற்­சியை நாம் உலக முஸ்­லிம்­க­ளுடன் சேர்ந்து கடு­மை­யாக எதிர்க்­கிறோம். ஜெரு­சலம் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான பூமி­யென ஐ.நா.சபை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இலங்கை ஐ.நாவின் உறுப்பு நாடு என்ற வகையில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் இந்தப் பயங்­க­ர­மான முடிவை எதிர்த்து ஐ.நாவில் முறை­யிட எமது அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும் என்றார்.

2 comments:

  1. Mamam...

    We Muslim Know a Hadees of Muhammed (sal).. I would like to remind you too. YES

    " A Muhmeen will not fall in to the same pit 2nd time "

    So, if we fall into the same pit, I mean bringing MARA Ruling, I fear that the title of MUHMEEN may not belong to us.

    So mamaa.. consider yourself too. May Allah protect you, me and all our muslim.

    ReplyDelete
  2. NEENKA THERUNTHUVATHAKKU VAIPE ILAAPA......... UNKALA SRILANKA ENTHE ORU MUSLIMUM KANNAKE EDUKKURELLA.....SUMMPA ARIKA VIDUVATHA NIRUTHAVUM.

    ReplyDelete

Powered by Blogger.