Header Ads



டிராம்பின் வெற்றி, முஸ்லிம் அறிஞர்களின் பிரதிபலிப்பு இதோ..!

-Mohamed Basir-

ட்ராம்ப் இன் வெற்றி, முழுவதுமாக தீங்கல்ல. அவர் அமெரிக்காவை நாசமாக்குவார். ஜனநாயகக் கட்சியை நாசம் செய்வார் அறபு நாடுகளுடனான உறவை நாசப்படுத்துவார். அமெரிக்காவின் உலகளாவிய உறவில் நாசம் விளைவிப்பார். அமெரிக்காவிலிருக்கும் அறபுகளின் பணம் திருப்பி பெறப்படும். இன்னும் பல நன்மைகள் உள்ளன..
அப்படித்தானே! கலாநிதி தாரிக் சுவைதான்.

அமெரிக்கத் தேர்தலில் ட்ராம்ப் வெல்வதையே நான் விரும்பினேன். மக்களை உசுப்பிவிடக்கூடிய முரட்டுத்தனத்துடன் அமெரிக்காவின் நட்பு நாடுகளை அறுத்துப் பலியிடக்கூடியவர் அவர்தான். ஹிலாரி, ஒபாமா செய்தது போல சாதுவாகவும், நயவஞ்சகத்தனத்துடனும்தான் அவர்களை பலியிடப் போவார். முஹம்மத் முஃக்தார் ஷன்கீதி

ட்ராம்ப் இன் வெளிப்பாடு –அவனது இறுமாப்பு, அறிவீனம் உள்ளடங்கலாக– அமெரிக்காவின் அடிப்படை வெளிப்பாடே. இரட்டை முகங்களையும், நழுவல் நிலைப்பாடுகளையும் கொண்ட ஒபாமா பிரதிநிதித்துவம் செய்த போலி அடையாளத்தை விட இது மிக நம்பகரமானது.  முஹம்மத் முஃக்தார் ஷன்கீதி

  1. قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ بِيَدِكَ الْخَيْرُ‌ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
    (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.
    (அல்குர்ஆன் : 3:26)

2 comments:

  1. நீண்ட கயிற்றில் விடப்பட்ட அமெரிக்கா .. விதி இதுவென்றால்?!!

    ReplyDelete
  2. கடந்த காலங்களில் இஸ்லாத்திற்கு எதிராக செயற்பட்டவர்கள் அழிந்தார்களே தவிர இஸ்லாம் அழிய வில்லை. அதனால ட்ரம்ப் இஸ்லாத்திற்கு எதிராக எதைச் செய்தாலும் அது அமெரிக்காவுக்கே பாதிப்பாக அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.