Header Ads



ரஹீம் மாஸ்டர், வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்


இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும், யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்கும் மற்றும் கல்வித் துறைக்கும் பாரிய பங்காற்றிய ரஹீம் மாஸ்டர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய கௌரவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் சார்பில், யாழ்ப்பாண சர்வதேச அமைப்பினால் (Jaffna Muslim Community - International) இந்த விருது வழங்கப்படவுள்ளது.  

இந்த தகவலை  அதன் ஏற்பாட்டாளர்கள உறுதிப்படுத்தினர்

கொழும்பில் நடைபெறவுள்ள எளிமையான வைபவமொன்றில், இந்த  வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைக்கப்படவுள்ளது.

இந்த வைபவம் குறித்த திகதி மிகவிரைவில் அறிவிக்கப்படவுள்ளளதுடன், ரஹீம் மாஸ்டரின் குடும்பத்தினருக்கும் இந்த தகவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



3 comments:

  1. எமது மண்ணிண் மைந்தன் சர்வதேச அமைப்பினால் வாழ் நாள் சாதனையாளர் விருது
    பெறுவதை நினைத்து எமது சமுகம் மகிழ்ச்சி அடைகின்றது என்பதை என்னும் போது
    JMC INTERNATIONAL அமைப்பாளர்கலை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றன்.

    இந்த கௌரவ ரஹிம் மாஸ்டருடைய விருதை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவி
    புரிந்த jaffnamuslim.com இனையத்திற்கும் எமது வாழ்த்துக்கள்.







    ReplyDelete
  2. jmc international அஜெண்டாவில் இல்லாத ஒரு விஷயத்தை செயற் படுத்த முடியுமா இது ஏட்டிக்கு போட்டி மாதிரி தான் தெரியுது
    மாஹிர்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்.
    மதிப்பிற்குரிய ரஹீம் மாஸ்டர் அவர்களிடம் கல்வி கற்றவன் நான், அவர் குறித்து எனக்கு பெரிய மரியாதை உள்ளது. ஒரு நிகழ்வில் அவரது பெயர் விடுபட்டுள்ளது, அதற்காக உடனடியாக இன்னொரு தரப்பு விருது வழங்குகின்றோம் என்று திடீர் என்று புறப்படுவது போட்டி பொறாமையை உண்டாக்குவதுடன், ரஹீம் மாஸ்டர் விருதுக்காக ஏங்கிக்கொண்டு இருந்தார் என்ற என்னத்தை தோற்றுவிக்கும்.

    தயவு செய்து இப்படியான அவசர, விவேகமற்ற செயற்பாடுகளை, ஏட்டிக்கு போட்டியான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.