Header Ads



'பெண்களுக்கு அநீதியிழைக்கும் தலாக்முறை, முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்' - மோடி அரசு

அனைத்து தரப்பினரிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தாமல், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட மாட்டாது' என்று மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

மூன்று முறை தலாக் கூறுவதை மத அடிப்படையில் மத்திய அரசு பார்க்கவில்லை. இது பெண்கள் சம்பந்தபட்ட உரிமை ஆகும். முஸ்லிம் சமூகத்தினரின் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக கூறுவது தவறானதாகும்.

முஸ்லிம் பெண்களும், அமைப்பினரும் தான், தலாக் முறைக்கு முடிவு கட்டக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றனர். இந்த விவகாரத்தில், மத்திய அரசின் கருத்துகளை அறிய உச்ச நீதிமன்றம் விரும்பியது. 

இதையடுத்து, "பெண்களுக்கு அநீதி இழைக்கும் தலாக் முறை, முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்' என்ற மத்திய அரசின் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் சரியான முடிவை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

2 comments:

  1. ஜசோதா பெண்ணும் மோடி அவர்களும் இஸ்லாமியராக இருந்திருந்தால்.இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்திருந்தால் (1968 வயதில் 17 வயதான ஜசோதாபென் 18 வயது மோடியை செய்து கொண்ட திருமணம் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் சரியாக நடந்த திருமணம் என்பதை நினைவூட்டுகிறேன்).

    ஓடி போன மோடியும் பழி இன்றி வாழ்ந்திருப்பார்.ஜசோதாபென் அவர்களும் மறுமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்திருப்பார்.அல்லது தான் மணவிலக்கான பெண் என்பதை உணர்ந்து கொண்டு பாஸ்போர்ட் முதல் ரேஷன் கார்டு வரை எளிதாக வாங்கி இருப்பார்.குழப்பமில்லாமல் வாழ்ந்திருப்பார்.

    ஹிந்து திருமண சட்டம் ஜசோதா பென் அவர்களுக்கு எந்த வகையில் உதவியது என்பதை எந்த இந்துத்வராவது விளக்க முயற்சி செய்யுங்களேன்.லட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள உடைகளை தினம் அணியும் கோடீஸ்வர கணவன்,இந்தியாவின் பிரதமர் அவரிடம் இருந்து இன்றுவரை ஒரு ரூபாய் ஜீவனாம்சம் பெற முடிந்ததா.

    அடிப்படை உரிமையான பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் கையெழுத்து மற்றும் திருமண சான்றிதழ் வாங்கி தர முடிந்ததா .தேர்தலில் நிற்க தடை வரலாம் என்றவுடன் வெட்கம்,கூச்சம்,குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாமல் படிவத்தில் மனைவி பெயர் ஜசோதா பென் என்று எழுதியவர் ஏன் தன் மனைவிக்கு பாஸ்போர்ட் கிடைக்க விடாமல் தடுக்கிறார் என்று எந்த பத்திரிக்கையாவது இன்றுவரை கேள்வி கேட்டதா.........?

    #நன்றி_Poovannan_Ganapathy

    ReplyDelete
  2. Right or wrong, Muslims at least say thalak three times and then get diverse, but you did not do anything and left your wife alone. So you are not a eligible person to comment on this issue.

    ReplyDelete

Powered by Blogger.