Header Ads



கிளிநொச்சி, வத்தளையை தொடர்ந்து கொட்டாவவில் பாரிய தீ விபத்து

கொட்டாவ - மத்தெகொட பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ பரவலை அறிந்த பிரதேச மக்கள் தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மின் சாரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தீ பரவியிருப்பதாக தியணைப்பு அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.

இதேவேளை தீ ஏனைய கட்டிடங்களுக்கு பரவாத வகையில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2

வத்தளை - ஹூணுபிடிய பகுதி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

3

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று (16) வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. 

No comments

Powered by Blogger.