Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட சதியை, வெளியிட்டான் ஞானசாரா (வீடியோ)

பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் அண்­மையில் கொரி­யா­வுக்­கான பயணம் ஒன்­றினை மேற்­கொண்­டி­ருந்தார். இதன்­போது அங்கு உள்ள இலங்கை சிங்­கள சமூ­கத்­த­வர்­க­ளி­டையே நடத்­தி­ய­தாக கூறப்­படும் சந்­திப்­பொன்­றி­லேயே அவர் இந்த விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

மும்­மானை விவ­காரம் எப்­படி ஆரம்­பித்­தது எனவும் அதற்­காக தாம் ஒரு வரு­ட­மாக  செய்த நட­வ­டிக்­கை­க­ளையும் ஞான­சார இதன் போது விளக்­கி­யுள்­ள­துடன் முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை முடக்­கு­வதை இலக்­காகக் கொண்டே இந்த திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.  இது தொடர்­பி­லான வீடியோ ஒளிப்­ப­திவை 'கொழும்பு டெலி­கிராப்' ஊடகம் வெளி­யிட்­டுள்­ளது. அதில் ஞான­சார தேரர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, 

கட்­சிக்­காக உயிரை விட தயா­ரான ஒரு குழு உள்­ளது. எனினும் நாட்­டுக்­காக உயிரை விட யாரும் தயா­ராக இல்லை. எனவே நாம் நாட்டைப் பற்றி யோசிக்கும் மக்­க­ளையே உரு­வாக்க வேண்டும். இன்­னொரு விட­யமும் உள்­ளது. நான் இது பற்றி ஏற்­க­னவே பல தட­வைகள் கூறி­யுள்ளேன். 6000 முதல் 7000 வரையில் எமது யுவ­திகள் தற்­போது முஸ்­லிம்­க­ளாக மதம் மாற்­றப்­பட்­டுள்­ளனர். இது பயங்­க­ர­மான நிலை­மை­யாகும்.

உதா­ர­ண­மாக உங்­களில் யாரா­வது கொரிய யுவதி ஒரு­வரை மணம் முடிப்­ப­தாக வைத்துக் கொள்­ளுங்கள். அவளை இலங்­கைக்கு அழைத்துச் சென்றால் நீங்கள் அவ­ரது பெயர், பரம்­ப­ரையை மாற்ற நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா? இல்லை தானே. பெயர் பரம்­பரை அப்­ப­டியே தான் இருக்கும். நாங்கள் அந்த அந்த கலா­சா­ரங்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து அவ்­வாறு நடந்து கொள்­கின்றோம்.

எனினும் முஸ்லிம் ஒருவர் சிங்­க­ளவர் ஒரு­வரை மண­மு­டித்தால் என்ன நடக்­கின்­றது? இரண்டு மூன்று மாதங்­களில் அந்த பெண்ணின் முழுப் பெயர் மாற்­றப்­ப­டு­கின்­றது. அவ­ளது பரம்­ப­ரையே மாற்­றப்­ப­டு­கின்­றது. அந்த நிமி­டத்தில் இருந்து சிங்­களப் பெயர் கலா­சாரம் எல்லாம் முடி­வ­டைந்து விடும்.

அதற்குப் பிறகு பாத்­திமா என்றோ அல்­லது வேறு வடி­விலோ பெயர் ஒன்று வரும். பிள்­ளை­க­ளுக்கும் அவ்­வாறே. பிள்­ளை­க­ளுக்கு சிங்­களப் பெயர் வைக்­க­மாட்­டார்­களே. அங்கும் மொஹம்மட் குட்­டி­களே உரு­வாகும். அதனால் இந்த நட­வ­டிக்­கைக்கு கண்­டிப்­பாக எதிர்ப்பு தெரி­விக்க வேண்டும்.

நாம் அதற்கு எதி­ராக முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கை­க­ளுக்கு அர­சியல் ரீதி­யாக எமக்கு சிறு ஒத்­து­ழைப்பு கிடைத்தால் இதனை முற்­றாக ஒழித்­து­வி­டலாம். எனினும் எமது அர­சியல்வாதி­களின் முது­கெ­லும்­பில்­லாத நட­வ­டிக்­கை­களும் அவர்கள் ஆட்சி, பதவி மீது கொண்­டுள்ள மோகமும் எமது சிங்­கள சமூ­கத்­துக்கு கிடைத்த சாபக் கேடு­க­ளாகும்.

உங்­க­ளுக்கு ஞாபகம் இருக்­கலாம், கடந்த நாட்­களில் குளி­யா­பிட்­டிய பகு­திக்கு என்னை வர வேண்டாம் என கூறி தடை உத்­த­ர­வொன்­றினைப் பெற நீதி­மன்றை நாடினர். ஏன் அவ்­வாறு நடந்­தது. பன சொல்­வதை தடை செய்­யவே அவ்­வாறு முயற்­சிக்­கப்­பட்­டது.  நாம் அங்கு ஒரு வேலைத் திட்­டத்தை முன்­னெ­டுத்தோம். அந்த வேலைத் திட்டம் ஒரு வரு­டத்தில் வெற்­றி­ய­டைந்­தது. உங்­க­ளிடம் நான் அதைக் கூறு­கின்றேன். ஏனெனில் உங்கள் மத்­தியில் உள்ள 15  அல்­லது 20 பேரோ அதனை விளங்கி அவ்­வாறு செய்­யு­மாறு இலங்­கையில் உள்­ள­வர்­க­ளுக்கு கூறினால் அதுவே பாரிய வெற்­றி­யாக இருக்கும். 

குளி­யா­பிட்­டியின் மும்­மான எனும் பகு­தியில் அழ­கான ஒரு வேலைத் திட்­டத்தை நாம் முன்­னெ­டுத்தோம். அது மிக்க வெற்­றியை தந்­தது. ஒரு வரு­டமே அமுல் செய்தோம். நான்கு இளை­ஞர்­களே களத்தில் இறங்­கினர். ஐந்து, ஆறு ஊர்கள் ஒன்று சேர்ந்­தன. அது ஒரு சிறிய முஸ்லிம் நகரம். அந்த நகரம் போச­னை­ய­டந்­தது, குறித்த சிங்­கள ஊர்கள் கார­ண­மா­கவே.  அந்த ஊரைச் சார்ந்தோர் இந்த வர்த்­தகம் கார­ண­மாக செல்­வந்­தர்­க­ளாக மாறி­ய­தை­ய­டுத்து பண பலத்தை பயன்­ப­டுத்த ஆரம்­பித்­தனர்.

இதன் பல­னாக அப்­ப­கு­தியில் இருந்த மைதா­னத்தை அவர்கள் வளைத்துப் போட முனைந்­தனர்.  எமது சிங்­கள இளைஞர் யுவ­தி­க­ளுக்கு விளை­யாட இடம் கிடைக்­க­வில்லை. அவர்கள் மைதா­னத்தை சுற்றி மைய­வாடி, மத்­ரஸா போன்­ற­வற்றை அமைத்து தமது பண‌ பலத்தை காட்டத் தொடங்­கினர் . இதற்கு சிங்­க­ள­வர்கள் எதிர்ப்புக் காட்டத் தொடங்­கினர்.

வீடு­களில் நடப்­படும் வெண்­டிக்காய், பயற்­றங்காய் போன்­றவை அதி­க­மாக அறு­வடை செய்­யப்­படும் போது, அதனை கடை­க­ளுக்கு எமது தாய்மார் கொடுப்­பது வழ­மை­தானே. இந்த  நிலையில் இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து முஸ்லிம் முத­லா­ளி­யிடம் சென்று அவ்­வாறு மேல­திக அறு­வ­டையை கொடுத்­துள்­ளனர். இதன் போது அந்த முத­லா­லிகள் ' எமக்கு இவற்றை பெற வேண்டாம் என பள்­ளி­வா­சலால் கூறி­யுள்­ளனர். மைதான விட­யத்தில் எதிர்ப்புக் காட்­டி­னீர்கள் தானே.' எனக் கூறி­யுள்­ளனர்.

 அந்த விட­யத்தை எமது தாய்மார் சாத­க­மாக எடுத்துக் கொண்­ட‌னர். பயிற்­றங்காய் கட்­டு­களை வீசி­விட்டு அவர்கள் களத்தில் இறங்­கினர். மிக அழ­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. தற்­போது அந்த முஸ்லிம் நகரம் முழு­வதும் ஈ அடிக்­கின்­றார்கள். நாம் அங்கு சிங்­கள கடைகள் 6, 7 வரை அமைத்து நல்ல வேலைத் திட்­டத்தை ஆரம்­பித்­து­விட்டோம். அதனால் முஸ்லிம் வர்த்­த­கர்கள் மூக்கால் அழு­கின்­றனர். அவர்கள் பள்­ளி­வா­ச­லுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறு­கின்­றனர்.

ஹாட்­வெயார் ஒன்றின் முத­லாளி தான் 7 இலட்சம் ரூபா கொடுக்க வேண்டும் என மூக்கால் அழு­கின்றார்.  இந்த நிலையில் இப்­பி­ரச்­சினை பிர­தேச செய­லகம் வரையில் சென்­றுள்­ளது. அங்கு கலந்­து­ரை­யாடல் நடக்கும் போது அவர்­க­ளுக்கும் விடயம் விளங்­கி­யுள்­ளது. இந்த நிலையில் முஸ்­லிம்­க­ளுக்கு உள்ள பண பலத்­தையோ அல்­லது அர­சியல் பலத்­தையோ பயன்­ப­டுத்தி சிங்­கள கடை­க­ளுக்கு செல்­லாமல் முஸ்லிம் கடை­க­ளுக்கே சிங்­க­ள­வர்கள் செல்ல வேண்டும் என அழுத்தம் கொடுக்­கப்­ப­டலாம் என நினைத்தே, ஞான­சார தேரர் வந்து ஒரு' பன'  நல்­லு­ப­தேசம் செய்ய  வேண்டும் என அவர்கள் தீர்­மா­னித்து என்னை அழைத்­தனர்.

இத­னை­ய­டுத்தே நான் அங்கு செல்­வதை தடை செய்யும் வித­மாக தடை உத்­த­ர­வொன்றைப் பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கப்­பட்­டுள்­ளது.  தடை உத்­த­ர­வுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கையெ­ழுத்­திட வேண்டும் அல்­லவா? இந் நிலையில் இந்த தடை உத்­த­ரவைப் பெற்­றுக்­கொள்ள முன் நின்­ற­வர்­களை அழைத்­துள்ள  சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நான் ஞான­சார தேரரின் 'பன' உப­தேசம், வேறு உப­தே­சங்கள் எல்லாம் கேட்­டி­ருக்­கின்றேன். நீங்­களும் சென்று கேட்­டுப்­பா­ருங்கள் என கூறி­யுள்ளார். இதனைத் தொடர்ந்தே பொலிஸார் 700 பேர் வரையில் குவிக்­கப்பட்டு அந்த  உப தேசம் மிக அழ­காக இரண்டு மணி நேரம் நடை பெற்­றது.

நான் இதனை ஏன் சொன்னேன் என்றால், நாம் நினைத்தால் மிக அழ­காக எமது வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுக்க முடியும்.  அதனால் ஒரு வளத்­தை­யேனும் வீணாக செல­வ­ழிக்­காது, சம்­பா­தித்து சிறு அள­வேனும் சேமித்து காணி, இட­மொன்றை கொள்­வ­னவு செய்து ஏதேனும் ஒரு வியா­பார நட­வ­டிக்­கையை ஆரம்­பி­யுங்கள்.

அத­னூ­டாக முன்­னேற முயற்­சிக்க வேண்டும். கண்­டிப்­பாக முடியும்.  எமது சமூகம் எல்லா வகை­யிலும் வேற்­று­மைப்­பட்டு நிற்­கின்­றது. பன்­ச­லை­களில் பிரி­வினை, மத குரு­மார்­க­ளி­டையே பிரி­வினை என எல்லா இடங்­க­ளிலும் பிரி­வி­னையே மேலோங்கி நிற்­கின்­றது. சில சம­யங்­களில் பிர­பா­கரன் செய்­ததைப் போன்று ரீ 56 ரக துப்­பாக்­கியை கையி­லேந்­தவும் எண்ணம் தோன்­று­கின்­றது. எனினும் நாம் தேரர்கள் என்பதால் அது முடியாதுள்ள­து.

பிரபாகரன் மட்டுமே உலகில் ஒரு அமைப்பை ஒரு முகமாக இறுதிவரை முன்னோக்கி கொண்டு வந்தவர். அல் கைதாவாலோ அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பாலோ கூட அது முடியாது போனது. அவர்கள் கூட இரு பிரிவுகளாக பிரிந்தனர்.  எனினும் 30 வருடங்கள் பிரபாகரன் அமைப்பை பிரிவினை இன்றி முன்னோக்கிக் கொண்டு வந்தார்.

காரணம் அதன் உறுப்பினர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகள் தொங்கவிடப்பட்டன. மறுத்தால் பின் புறத்தே ரீ 56 துப்பாக்கியால் சூடு வைக்கப்பட்டது. நான் நினைக்கின்றேன், சிங்களவர்களையும் அப்படியான ஒரு நடவடிக்கை மூலமே ஒரு முகப்படுத்த முடியும். 

-விடிவெள்ளி - MFM.Fazeer-
 https://www.youtube.com/watch?time_continue=33&v=68Qwu6y4k10

7 comments:

  1. This story may be true or false..we should use our brain also...mosques administration should have knowledge how to guide people around them..
    They should not tell to buy or sell for any one..business is beyond all religious limitations...we should not divide people like that..
    I do not know if it is true that this shop Ower said likewise that to that Sinhalese ladies ..it may be some creation from BBS. BBS will try to do all dirty work to confuse people....they do not like to see people live in peace..they do not like Singhalese and Muslims live in peace ..
    They want to incite violence
    Before we do any thing we should be careful..
    Believe me that even if they start shops and market many sinhasles people prefer Muslims over in Shinha shop ...
    It is not a problems.

    But we should think carefully before we do take any action in mosques .people need to eBay educated

    ReplyDelete
  2. BBS's invention to bring down muslims's business by instructing Sinhalese people not to keep business relationship with Muslims will not succeed if we Muslims do our business according to Islam.Islam has given us an atractive way of business . If we do so we can get rewards in next life (,which is the our main goal) as well as here. Most of Sinhalese brothers now understood the baseless intention of BBS so that they have allready neglected the group. We saw that clearly in the last election. Very few chose BBS to cast thire votes. But still our business men should show our good manners and attitudes in business. This our obligation towards Islam and our community.

    ReplyDelete
  3. Anyway Muslims will never unite.they will succeed secretly wt they planned.Muslims as usual they will fight as thawheed,thableeq,hubbu n jamath Islamic.

    ReplyDelete
  4. This Galaboda Thero is intentionally misleading the
    people he is supposed to be guiding .His destructive
    racist politics is harming not only Muslims but also
    his adherent Buddhist followers and the whole
    country. He continues his ranting of Muslim way of
    life as if he had lived part of his life in Islam .I
    have a strong feeling that he follows what Zakir
    Naik does to other religions in India , belittling
    other religions in public .
    Sinhalese girls converting to Islam before marriage
    to their Muslim boy friends is voluntary with full
    of enthusiasm on the part of the girls. Sinhalese
    are a free society ready to mix with any other
    society wherever in the world . Galaboda can not
    stop it ! Our boys will go on loving Buddhist
    girls as long as Buddhist girls want them .
    Simple as that . Obama has said America stands
    by that freedom in our country !

    ReplyDelete
  5. As Rifkan Nawas said it's so difficult to unite our people. We belong to many different groups called as Thouheeth Thableek etc.. Uniting our people is only possible when all the moulavis unite..

    ReplyDelete
  6. If the Masjid Administrators have advised the Muslim shop owners to not purchase vegetables from the local Sinhala Producers, its totally wrong! They are responsible for all happenings against that particular place.

    ReplyDelete

Powered by Blogger.