கொழும்பில் உங்களுக்கு, தேவைகள் உள்ளதா..? (இலவசம்)
தலைநகர் வாழ் சில சகோதரர்களின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டுள்ள V4U Volunteers Hub எனும் தன்னார்வத் தொண்டு மையம் தற்போதைக்கு மட்டுப்படுத்தப்பட்ட தனது மனிதாபிமான சேவைகளை தூரப்பிரதேசங்களில் இருந்து வருகின்ற உங்களுக்கு வழங்கவெனவும் - நீங்கள் தலைநகரில் நிறைவேற்ற வேண்டியுள்ள ஏதேனும் அவசரத் தேவை இருப்பின் அதுகுறித்த தகவல்களை அதன் முகநூல் பக்கத்தில் பதிவேற்றி உரியவர்களின் ஆலோசனைகளை / உதவிகளைப் பெற்றுத் தருவதற்கும் என பின்வரும் தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துகின்றது.
0775 285 999
* உங்களுக்கு தலைநகரில் ஏதேனும் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்வதற்கான போக்குவரத்து மார்க்கம் பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றதா?
*ஏதேனும் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தலைநகர்ப் பாடசாலைகளின் அமைவிடங்கள் குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றனவா?
*ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளின் உதவிகள் தேவைப்படுகின்றனவா?
*அவசரமாக ஏதேனும் புத்தகங்கள் / மருந்து மாத்திரைகள் வாங்க வேண்டிய தேவைகள் உள்ளனவா?
எம்மால் முடியுமான அளவுக்கு சில வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும், உதவிகளையும் உங்களுக்கு இலவசமாகப் பெற்றுத்தர தயாராக உள்ளது V4U Volunteers Hub.
தேவைகள் குறித்து எம்முடன் கதையுங்கள் -
0775 285 999
எமது இந்த முயற்சியில் இணைந்து கொண்டு உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தின் ஒரு பகுதியை மற்றவரின் நலனுக்காக செலவிட விரும்பின் எமது முகநூல் பக்கத்தை 'லைக்' செய்து இணைந்துகொள்ளுங்கள்.
இத்தகவலை முடியுமானவரை SHARE செய்யுங்கள்.
- V4U Volunteers Hub.
29/08/2016
Post a Comment