Header Ads



சவுதி அரேபிய கிரிக்கெட் சங்கத்தை, ICC இணை உறுப்பினராக அங்கீகரித்தது

சவுதி ஆரேபிய கிரிக்கெட் சங்கத்தை ஐசிசி இணை உறுப்பினராக அங்கீகரித்துள்ளது. இதனால் சவுதி அரேபியாவில் கிரிக்கெட் வளர்ச்சியடைய அதிக வாய்ப்பு பெற்றுள்ளது.

ஐசிசியில் அஃபிலியேட் உறுப்பினர், அசோசியேட் உறுப்பினர் மற்றும் முழு உறுப்பினர் என மூன்று பிரிவுகளி்ல் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் இடம் பிடித்துள்ளனர்.

இதில் சவுதி அரேபியா அஃபிலியேட் உறுப்பினராக கடந்த 2013-ம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டது. அதன்பின் 2015-ம் ஆண்டு 4350 கிரிக்கெட் வீரர்களுடன் 80 கிரிக்கெட் வாய்ப்புகளை அர்ப்பணித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சவுதி கிரிக்கெட் சென்டர் இணை உறுப்பினராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கை தற்போது ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளது.

இதனால் ஐ.சி.சி.யின் 39-வது இணை உறுப்பினராக சவுதி அரேபியா இணைந்துள்ளது. 

No comments

Powered by Blogger.