Header Ads



ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானங்கள் பாகிஸ்தானுக்கு..!!

பாக்கிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் இருந்து ஏ-330 ரக விமானங்களை குத்தகை பெறும் வகையிலான உடன்படிக்கையில் இன்று -29- கைச்சாத்திட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது என்று பாக்கிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ஒப்பந்தத்திற்கமைய முதலாவது விமானம் அடுத்த வாரம் பாக்கிஸ்தானின் தேசிய விமான நிறுவனத்திடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 2 விமானங்கள் எதிர்வரும் மாதங்களில் கையளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டத்தை ஈடுசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. நாட்டின் பாராளுமன்றத்தையும் வாடகைக்கு கொடுக்க முடியாதா?பெருந்தொகைபணத்தை மீதப்படுத்தலாம் சண்டை அடிதடி இல்லாமல் இருக்கும் நாட்டின் மானம் பாதுகாக்கபடும் கள்வர்களும் போதைப்போருள் வியாபாரிகளும்,கொலைகாரர்களும் கூடிப்பேச கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து சண்டை பிடிக்க பாராளுமன்றம் தேவையா?நாட்டில் யுத்தம் இல்லை வீணான செலவுகள் இல்லை ஏன் ஜனாதிபதிகூட ஆடம்பர செலவு செய்யவில்லை இவ்வாறான நல்லாட்சியில் விமானங்களைபராமரிக்க முடியாமல் அன்னிய நாட்டுக்கு குத்தகைக்கு விடுவது இலங்கையில் வாழும்ஒவ்வொருவருக்கும் தலைகுனிவுதான்

    ReplyDelete

Powered by Blogger.