Header Ads



"ஞானசாரர் கைது செய்யப்பட்டால், பௌத்தர்கள் பதற்றம் அடைவார்கள்"

இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய அமைப்பு ஒன்றுக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்படும், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா எனும் அமைப்பே இவ்வாறு தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்துகொண்ட அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முஸ்லிம் கவுன்சில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடனும், அரபு நாடுகளுடன் தொடர்புகளை பேணிவருகிறது.

அத்துடன், கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய வேண்டும் என அந்த அமைப்பு பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளது.

ஞானசார தேரர் கைது செய்யப்படுவதையே அந்த அமைப்பு எதிர்பார்க்கின்றது. ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால், நாட்டின் பௌத்தர்கள் பதற்றம் அடைவார்கள்.

அதன் பின்னர் கலவரம் எற்படும். இதுவே அந்த அமைப்பின் இலக்கு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முஸ்லிம் கவுன்சிளுக்கு நாட்டின் நல்லிணக்கம் தொடர்பில் அக்கறை இருக்குமாயின், அவர்கள் எம்முடன் கலந்துரையாடி இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. This is not a reality. We known that last time.
    The BBS is creating more lies among the Sinhalese about Muslims

    ReplyDelete

Powered by Blogger.