Header Ads



அல்லாஹ்வின் இல்லத்தில் பன்றியில் உடற்பாகங்கள் - அக்குறணையில் காடையர்கள் அராஜகம்

(JM.Haffez)

அக்குறணைப் பிரதேசத்திலுள்ள அளவத்துகொடை மல்கம்மந்தெனிய ஜூம்மா பள்ளிக்கு அருகில்; பன்றி முற்களை இனம் தெரியாத ஒரு குழு வீசிச் சென்றுள்ளதாக அளவத்துகொடைப் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

(இன்று 1.7.2016) நள்ளிரவு இச்சம்சபவம் இடம் பெற்றுள்ளதாகவும் சத்தம் கேட்டு அயலில் உள்ள ஒருவர் வந்து பாhத்த போது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்றர் ஒருவரது கையில் வாள் ஒன்று இருந்ததாகவுவர் வெளியே வந்தவரை வாளைக்காட்டி மிரட்டிச் சென்றதாகவும் அப்புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து 'கியாமுல் லைல்' நள்ளிரவுத் தொழுகையில் ஈடபட்டிருந்தவர்கள் சற்று விழிப்பாக இருந்ததாகவும் மீண்டும் அதிகாலை சுமார் 3.00 மணியளவில் குறிப்பிட்ட கோஷ்டி மீண்டும் வருகை தந்ததாகவும் ஆனால் அயலவர்களின் விழிப்பு காரணமாக அவர்கள் தப்பிச் சென்றதாகவும் ஊரவர்கள் தெரிவித்தனர்.

துர் வாடை வீசுகின்ற மிகவும் பழுதடைந்த பன்றி ஒன்றின் உடற்பாகங்களையே இவ்வாறு அவர்கள் வீசிச் சென்றதாகவும் இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும் அமைதியாக இருந்து தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றிவரும் முஸ்லீம்களை வீணாக வம்புக்கு இழுக்கும் ஒரு செயலாக தாம் கருதுவதாகப் பலர் கருத்து வெளியிட்டனர்.

புள்ளிக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டின் முன் (கேட்) கடவையில் சிறிய பாதிப்புஏற்பட்டுளளதாகவும் தெரிய வருகிறது. பள்ளிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அளவத்துகொடைப் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகத்தில் இதுவரை எவரும் கைதாகவில்லை எனத் தெரிய வருகிறது.

2 comments:

  1. These are troublemakers... Shall we maiantian patience in this month..
    Good patience is a good reply to them
    How many time they will keep doing it
    We Should deal with this care .. Do not keep arguing about it ...
    This type of persecution is not new to Islam and Muslims
    Let them do it and see how long they will do ..
    What we need to go legal way to address this
    N

    ReplyDelete
  2. This matter should take to RRT - Lawyer Shiraz Noordeen and his Team attention immediately as per JM news today too.

    ReplyDelete

Powered by Blogger.