முஸ்லிம்களின் பணம், திட்டமிட்டு கொள்ளையடிப்பு (பாதிக்கப்பட்ட ஒரு சகோதரரின் வாக்குமூலம்)
செலிங்கோ குழுமத்தின் ஒரு அங்கமாக மிகச் சிறந்த முறையில் செயற்பட்டு வந்த ஒரு நிறுவனம் தான் செலிங்கோ புரொபிட் ஷெயாரிங் நிறுவனம். செலிங்கோ குழுமத்தின் தலைவர் முஸ்லிம்களுக்கான பிரத்தியேகமான நிதிச் சேவைகளை வழங்கும் நோக்கில் இதனை ஸ்தாபித்திருந்தார். ஆனால் கடந்த அரசின் ஆட்சியாளர்கள் செலிங்கோ குழுமத்தின் தலைவரோடு கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்வின் காரணமாக மிக நுட்பமாக சதி செய்யப்பட்டு செலிங்கோ வர்த்தக சாம்ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்டது. மிக நுட்பமான சதித்திட்டத்தின் மூலம் சீட்டுக் கட்டு போல் கவிழ்க்கப்பட்ட செலிங்கோ சாம்ராஜ்ஜியத்தில் செலிங்கோ புரொபிட் ஷெயாரிங் மற்றும் செலிங்கோ குளோபல் புரொபிட் ஷெயாரிங் என்பன மட்டும் தப்பிப் பிழைப்பது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
மிகச் சிறந்த முகாமைத்துவமும் கட்டமைப்பும் இருந்தும் கூட செலிங்கோ புரொபிட் ஷெயாரிங் கலைந்து போவதற்கு பிரதான காரணம் அதன் பணிப்பாளர் சபைக்குள் இருந்த ஒரு குள்ளநரி என்பது மிக நீண்ட காலம் கழித்தே தெரியவந்துள்ளது. செலிங்கோ குழுமம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஆட்சியாளரோடு சேர்ந்து இந்த குள்ளநரி செய்த சதியின் பலனை அது தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.
செலிங்கோ தலைவரின் தாராள சிந்தனை, தயாள குணம் என்பனவற்றொடு ஒப்பிடுகையில் அவர் அருகில் கூட நிற்கக் கூட தகுதியற்ற இந்த குள்ளநரி செலிங்கோ குழுமத்தின் கீழ் உள்ள பல நிறுவனங்களை தற்போது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டது. அதில் ஒன்று தான் செலிங்கோ புரொபிட் ஷெயாரிங் நிறுவனம்.
செலிங்கோ புரொபிட் ஷெயாரிங் நிறுவனத்துக்கு பொருப்பாளராக ஒருவர் இருக்கையில் அவருக்கு கூட தெரியாமல் அவரையும் ஏமாற்றி செலிங்கோ குழுமத்தின் பணிப்பாளர் என்ற உயர் பதவியை பயன்படுத்தி இவர் செய்துள்ள அநியாயங்கள் தற்போது கணக்காய்வுகளின் மூலம் வெளிவரத் தொடங்கியுள்ளன.
முஸ்லிம்களின் பணத்தை முழமையாகச் சூறையாடி அதன் பலனை தற்போது அவர் அனுபவித்து வருகின்றார். செலிங்கோ குழுமத்தில் சிதைவடைந்த பல நிறுவனங்களில் மக்கள் போட்ட பணம் தற்போது கட்டம் கட்டமாக மீளச் செழுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் இந்தப் பணத்தை செலுத்த விடாமல் தன்னிடம் உள்ள கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி இந்த குள்ளநரி அதிகாரி தடுத்து வருகின்றார்.
முஸ்லிம்களின் பத்தை கொண்டு இவர் செய்துள்ள ஒரு சில மோசடிகளை இங்கே குறிப்பிடுகின்றோம்: செலிங்கோ புரொபிட் ஷெயாரிங் நிறுவனத்தின் பெயர் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியின் போலியான கை எழுத்து என்பனவற்றைப் பயன்படுத்தி அம்பாந்தோட்டை கிராமிய அபிவிருத்தி வங்கியில் இருந்து 50 மில்லியன் ரூபா கடன் பெறப்பட்டுள்ளது. கம்பனி பெயரில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பெறப்பட்டுள்ள இந்தக் கடன் தொகை அவரின் சட்டைப் பைக்குள் நேரடியாகச் சென்றுள்ளது. இன்று அது முஸ்லிம்களின் முதலீட்டுப் பணத்தில் இருந்து செலுத்தப்பட வேண்டிய கம்பனியின் கடனாக மாறியுள்ளது.
செலிங்கோ புரொபிட் ஷெயாரிங் பெயரைப் பயன்படுத்தி செலிங்கோ தகப்புல் நிறுவனத்தில் 150 மில்லியன் ரூபா பங்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பதிவுகள் மட்டும் தான் கணக்குப் புத்தகங்களில் உள்ளனவே தவிர இதற்கான இலாபம் எங்கே போனது என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை.
செலிங்கோ குழுமத்தின் இன்னொரு இணை நிறுவனமான சசெக்ஸ் சர்வதேச பாடசாலையின் பிரதி தலைவர், பணிப்பாளர், என பல பதவிகளை வகிக்கும் இந்த குள்ளநரி அங்கும் தனது பதவிகளை துஷ்பிரயோகம் செய்து பல கோடி ரூபாய்களை ஏப்பம் விட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் எல்லா பிரிவுகளிலும் தகுதியற்றவர்களையும் தனக்குத் தேவையானவர்களையும் நியமித்து நிதி பிரிவை தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இந்த மோசடிகள் புரியப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் முதலீட்டுப் பணத்தை வைத்து நிறுவனத்தின் ஏனைய பணிப்பாளர்களுக்குத் தெரியாமல் குiபெயசய ஊழரவெல ஊடரடி என்ற பெயரில் ஒரு விடுதியை அமைத்து அங்கே தனது உல்லாச வாழ்க்கையை தனது மேல்மட்ட சகாக்களுடன் இணைந்து அனுபவித்து வந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு ஆடம்பர விபசார விடுதி போல் செயற்பட்டு வந்துள்ளது. இது குறித்த முழமையான விவரங்களை அறிந்த ஒரே நபராக இந்தக் குள்ளநரி மட்டுமே உள்ளது.
தற்போது இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த நிறுவனத்துக்கும் முறைப்படி நியமனங்கள் செய்யப்படவில்லை. இந்த நிறுவனங்களில் தற்போது வாடிக்கையாளர் விவரம் ஊழியர் விவரம் என எதுவுமே இல்லை. வாடிக்கையாளர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தந்திரமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு இவருக்குத் தேவையானவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் செலிங்கோ நிறுவனங்களுக்குள் இவர் தனிக்காட்டு ராஜாவாக மாறியுள்ளார்.
ஆனால் இந்த கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் செலிங்கோ புரொபிட் ஷெயாரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் அவருக்கு ஆதரவான ஒரு சில ஊழியர்கள் மட்டும் தங்களை நம்பி பணத்தை முதலீடு செய்த முஸ்லிம்களுக்கு அவர்களின் பணத்தை மீளப் பெற்றுக் கொடுக்க பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை தண்டித்து அங்கிருந்து விரட்டும் வகையில் கடந்த நான்கு மாதங்களாக அவர்களுக்கான மாதாந்த சம்பளக் கொடுப்பனவு கூட வழங்கப்படாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவரின் ஆடம்பர வாழ்வுக்காக மிகவும் அர்ப்பணத்தோடு ஈட்டப்பட்ட செலிங்கோ நிறுவனத்தின் முழு வளங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
செலிங்கோ குழுமத்தின் செயல் இழந்துள்ள பல நிறுவனங்களில் இருந்து இவருக்கு மட்டும் இன்னமும் ஆலோசனைக் கட்டணம் என்ற பெயரில் மாதாந்த கொடுப்பனவு ஒன்று செலுத்தப்பட்டு வருகின்றது. ஓவ்வொரு நிறுவனமும் செலுத்தும்; ஆகக் குறைந்த தொகை 125000 ரூபாவில் தொடங்குகின்றது.
ஸ்ரீராம், கோல்டன் கீ, குNபு, செலிங்கோ பினான்ஸ் அன்ட் கெரண்டீ நிறுவனம் என பல நிறுவனங்களையும் இவர் தற்போது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார். இவற்றில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு கட்டம் கட்டமாக பணத்தை திருப்பி வழங்க பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் முஸ்லிம்களின் பணத்தை திருப்பி செலுத்த மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்தப் பணத்தின் பலன்களை இவர் மட்டும் இப்போது அனுபவித்து வருகின்றார். பணம் போட்ட முஸ்லிம்கள் விழித்தெழுந்து இவரைச் சூழ்ந்து கொண்டால் தான் அவர்களுக்கு விமோசனம் கிட்டும்.

வேளை செய்யாமல் சம்பாரிக்க நினைத்தால் அஅப்படித்தானே. அல்லாஹ் அதில் பரகத்தை ஏற்படுத்தபடுத்தமாட்டான்
ReplyDeleteWell said VSL :))
ReplyDeleteசில வருடங்களுக்கு முன்னர் நோன்பு காலத்தில் சஹர் வேளையில் வானொலி, மற்றும் ஊடகங்கள் மூலம், அவர்களிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு இதனை முஸ்லிம்களிடம் ப்ரொமோட் பண்ணியவர்களும் இதற்கு ஒருவகையில் உடைந்தைதான்.
ReplyDeleteவட்டி ஹராம் எப்போது ஹலால் ஆனது
ReplyDelete