Header Ads



மஹிந்தவுக்கு எதிராக சந்திரிக்கா - மைத்திரியின் கரங்களில் தீர்மானிக்கும் பொறுப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நேற்று மாலை -06- அவுங்கலவில பகுதியில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த 7 பேரின் கட்சி உறுப்புரிமைகளை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, குமார வெல்கம, பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, ரோஹித அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஏழு பேரையே கட்சியில் இருந்த நீக்குவதற்கான தீர்மானம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 28ம் திகதிக்குள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்கவும், சந்திரிக்கா பண்டார நாயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், இதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த இரகசிய கலந்துரையாடல்களின் முடிவானது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன் இதன் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.