ஜம்இய்யத்துல் உலமா ஜனாதிபதிக்கு, அனுப்பிவைத்துள்ள அவசர கடிதம்
'முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாகக் கருதும் அல்லாஹ்வையும் இறைதூதர் முஹம்மது நபியையும் ஞானசார தேரர் அவமதித்துப் பேசியுள்ளமையை முஸ்லிம்களால் சகித்துக்கொள்ள முடியாது.
எந்தவொரு முஸ்லிமாலும் இதனை அனுமதிக்க முடியாது. நீதியின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இவ்விடயத்தில் நியாயமான தீர்வொன்றினை எதிர்பார்க்கிறார்கள்' என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாரக் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மஹியங்கனையில் ஆற்றிய பகிரங்க உரையை அனைவரும் அறிவார்கள். அந்த உரை முஸ்லிம்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் முஸ்லிம் அமைப்புகளினால் பொலிஸ்மா அதிபருக்கு முறையிடப்பட்டது.
இதனையடுத்தே தேரர் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாகக் கருதும் அல்லாஹ்வையும் இறைதூதர் முகம்மது நபியையும் அவமதித்துப் பேசியுள்ளார். கருத்து வெளியிட்டுள்ளார். இதனை எந்தவொரு முஸ்லிமும் சகிக்கமாட்டார். ஞானசார தேரர் பேசியுள்ளதை எந்தவொரு சமய நம்பிக்கையுள்ளவரும் அனுமதிக்கமாட்டார்கள்.
ஞானசார தேரர் மஹியங்கனையில் ஆற்றிய உரையில் மீண்டும் அளுத்கமை போன்றதோர் சம்பவம் தேவையா என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதுவும் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது.
அவர் முஸ்லிம்களையும் பொலிஸாரையும் எச்சரிக்கும் பாணியில் பேசியுள்ளார். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி வெறுப்புணர்வு ஏற்படும் வகையிலான அவரது உரையை நாம் கண்டிக்கிறோம்.
அளுத்கம சம்பவத்துக்கு யார் பொறுப்புதாரி என்பது கடந்த காலங்களில் அறிய முடியாதிருந்தது. தற்போது ஞானசார தேரர்தான் அளுத்கம சம்பவத்துக்கு முழுமையான பொறுப்புதாரி என நிரூபணமாகியுள்ளது. 'போய் அல்லாஹ்விடம் முறையிடுங்கள்' என்று கூறுவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
அளுத்கம சம்பவத்துக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமையே அவரை இவ்வாறான பேச்சுக்கு உற்சாக மூட்டியுள்ளது என நாம் நினைக்கிறோம். அதனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வகையில் முஸ்லிம்கள் இவ்விவகாரத்துக்கு நியாயமான தீர்வினை எதிர்பார்க்கிறார்கள்.
அரசாங்கம் எவருக்கும் தேவையற்ற ஆபத்தான நிலைமைகளை உருவாக்க இடமளிக்க வேண்டாமென வேண்டிக் கொள்கிறோம்.
சாந்தியும் சமாதானமும் மிக்க நாட்டுக்காக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Yahapalanaya jokers are not less than MR.
ReplyDeleteI was telling the same thing. The election was supported by the same people who supported David Cameron. The Zionists.
ReplyDeleteSo they come in sheeps skin. They are actually foxes.
We can't expect MR or MY3 to do Anything better for us. We Muslims should unite. Control our feelings, think wisely. Shouldn't get carried away.
The enemies of Islam will do everything to provoke and distable our economy. That's why every tin something happens they targets Muslim owned businesses.