Header Ads



அர்ஜூன் மகேந்திரன் விவகாரம் - UNP + SLFP முறுகலா..?

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக்காலத்தை நீடிக்கக் கூடாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதியும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், ஆளுநர் பதவியில் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவதாக கூறப்படுகிறது.

எனினும் பதவியில் தொடர்ந்தும் இருக்க மகேந்திரன் விரும்பவில்லை எனவும் தெரியவருகிறது.

திறைசேரி முறிப்பத்திர விற்பனையில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

எனினும் உரிய நடைமுறைகளுக்கு அமையவே முறிப்பத்திரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கியில் கூறப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொருளாதார நிபுணரான தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், வங்கி துறை தொடர்பிலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பதுடன் சிங்கப்பூர் உட்பட சில நாடுகளின் வங்கிகளின் பிரதான அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

No comments

Powered by Blogger.