Header Ads



எலும்புக்கூடு போன்று காட்சியளிக்கும், சலாவ இராணுவ முகாம் (புதிய படங்கள்)


கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தினால், அதற்கு அருகில் இருந்த ரணவிருகம எனப்படும், படையினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புத் தொகுதி முற்றாக அழிந்து போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரில் இறந்த சிறிலங்கா படையினரின் குடும்பங்கள் மற்றும் உடல் உறுப்புக்களை இழந்த படையினரின் குடும்பங்களுக்காக, 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ரணவிருகம வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆயுதக் கிடங்கின் எல்லையை ஒட்டியதாக அமைக்கப்பட்ட இந்த ரணவிருகம கிராமத்தில், 107 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் 80 வீடுகள் முற்றாக அழிந்து போயுள்ளன. ஏனைய வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்தக் கிராமத்திலுள்ள வீடுகள், குண்டுச் சிதறல்களால் சிதைந்து போயிருப்பதுடன், எங்கும் குண்டுகளின் சிதறல்கள் பரவிக் கிடக்கின்றன.

ஆயுதங்கள் சேமிக்கப்பட்டிருந்த கட்டடங்கள் எலும்புக்கூடு போன்று காட்சியமளிப்பதை வானத்தில்  இருந்து எடுக்கப்பட்ட படங்கள், மூலம் தெளிவாக பார்க்க முடிகிறது.





No comments

Powered by Blogger.