வசீம் தாஜூடீன் கொலை, OIC 2 மணி நேரம் சுயவாக்குமூலம் வழங்கினார்
றகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கின் சந்தேகநபரான நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா இன்று -10- நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகளினால் கொழும்பு மேலதிக நீதவான் நிஷந்த பீரிஸின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டர்.
அதன்படி கொழும்பு மேலதிக நீதவான் நிஷந்த பீரிஸின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து சந்தேகநபர் சுமித் பெரேராவிடம் 2 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
றகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை சம்பவம் தொடர்பில் தானாக முன்வந்து வாக்குமூலம் வழங்க தயார் என்று சந்தேகநபரின் சட்டத்தரணி நேற்று நீதிமன்றில் கூறியிருந்தார்.
அதன்படி சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷந்த பீரிஸ் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

Post a Comment