Header Ads



யானை குட்டியை வாங்கிய நீதிபதிக்கு விடுதலை, விற்றவருக்கு விளக்கமறியல்

 
முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவுக்கு சட்டவிரோதமான முறையில் யானை குட்டியை விற்பனை செய்ததாக கூறப்படும் மகரகமவை சேர்ந்த சந்திரரத்ன யட்டவர என்பவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான கனிஷ்க விஜேரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்வதற்கான வாதங்களை அன்றைய தினம் முன்வைக்குமாறும் நீதவான் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் நேர்நிலையான திலின கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.