Header Ads



Mp களின் தேடுதல் 10.2 பில்லியன் பெறுமதியான காலாவதி மருந்துகள் கண்டுபிடிப்பு

சுமார் 10.2 பில்லியன் ரூபா பெறுமதியான காலாவதியான மருந்து தொகை மூன்று களஞ்சியங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற (கோப் குழு) தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

மருந்து களஞ்சியம் ஒன்றில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் குழுவின் உறுப்பினரும் பிரதியமைச்சருமான அசோகா அபேசிங்க இதனை கூறியுள்ளார்.

கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் கோப் குழுவின் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் இந்த தேடுதலில் கலந்து கொண்டனர்.

மேலும், இப்படியான விடயங்களை நாடாளுமன்றத்தில் வெளியிடும் போது அடிதடியில் ஈடுபட நேரும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Current and ex health ministers are the fully responsible to answer this fraud

    ReplyDelete

Powered by Blogger.