மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், வெலே சுதாவின் குடு வியாபாரம் தொடர்கிறது
போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள வெலே சுதா மற்றும் சூசே ஆகியோர் சிறையில் இருந்தவாறு ஈடுபட்டுள்ள போதைபொருள் வியாபாரம் தொடர்பில் விசாரணைகளின் போது தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
1 கிலோகிராம் ஹெரோய்ன் உள்ளிட்ட ஏனைய சிலவகை பொருட்களுடன் 3 பேர் இன்று (22) அதிகாலை கொழும்பில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்தாக பொலிஸ் தலைமையக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சர்வதேச போதைபொருள் வியாபாரத்தின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த சம்பவம் தொடர்பில் போதை ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
வெலே சுதாவுக்கு நீதிமன்றம் ஏற்கனவே மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெலே சுதாவுக்கு நீதிமன்றம் ஏற்கனவே மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment