Header Ads



றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு..!

இழுத்தடிக்கப்படும் யாழ் முஸ்லிம்களின் உடைந்து விடுகளுக்கு நஷ்டஈடு! நடவடிக்கை எடுக்குமாறு  அமைச்சர் ரிஸாத்திடம்  முறையீடு 

கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் ரிஸாத் பதியுத்தீன் தலைமையில் யாழ் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் உடைந்த வீடுகளுக்கான நஷ்டஈட்டை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் ரிஸாத் பதியுத்தீன் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் மாதமொன்று கடந்தும் இது சம்பந்தமான வேலைத்திட்டங்கள எதுவும் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படவில்லை. 

நஷ்டஈடு சம்பந்தமாக வீடமைப்பு மீள்குடியேற்றம் என்ற பல்வேறு பெயர்களில் பல விண்ணப்பங்கள் கிராம சேவகர்கள் ஊடாக ஏற்கனவே சமர்ப்பிக்கப்படடுள்ளது. ஆனால் எதுவும் நடந்த பாடில்லை. 2000 முஸ்லிம்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 90 பேருக்கு மட்டுமே வீடமைப்புக்கான உதவிகள் வணங்கப்படுவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றது. 

எனவே வீடுகள் உடைக்கப்பட்ட 1300 இக்கு மேல் உள்ளது. அவர்களது விண்ணப்பங்களின் நிலை என்ன என்ற விபரத்தை யாழ் அரச அதிபரிடமிருந்து பெற்று மக்களுக்குத் தெரியப் படுத்துவதற்கு அமைச்சர் ரிஸாத் பதியுத்தீனால் மட்டுமே முடியும் என்பது யாழ் முஸ்லிம்களின் கருத்தாகும் எனவே யாழ் முஸ்லிம்கள் ரிஸாத் அவர்களை இது  சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து எப்போது வீடுகளை திருத்துவதற்கான நஷ்டஈடு கிடைக்குமென்று தெளிவுபடுத்துமாறு யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பாக அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். 

இங்கனம் 

முஹம்மது ஜான் 

யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றம் மற்றும் மீள்நிர்மானத்துக்கான நிறுவனம். 

No comments

Powered by Blogger.