Header Ads



காத்தான்குடி பொதுச் சந்தையில் தீ (படங்கள்)


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பொதுச் சந்தையில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இச்சம்வத்தினால் சுமார் 25 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

காத்தான்குடி பொதுச் சந்தையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரபல்யமான வர்த்தக நிலையமான அஸ்ரப் என்பவரின் பலசரக்கு கடைகளே இவ்வாறு எரிந்துள்ளன.

தீ விபத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொது மக்களின் உதவியுடன் ஏனைய கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-ஜவ்பர்கான்-

No comments

Powered by Blogger.