பள்ளிவாசல் விவகாரத்தில், அமைச்சரை சாடிய ரணில்
தெஹிவளை - பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்காமல் ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரட்நாயக்காவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெஹிவளை பள்ளிவாசல் விவகாரத்தை அமைச்சரே நேரடியாக கையாண்டு இருக்க வேண்டுமெனவும், அவர் இதனை பொலிஸாரிடம் ஒப்படைத்தமையே நிலைமையை சிக்கலாக்கியுள்ளதென அமைச்சரை சாடியுள்ள ரணில், இதுவிடயத்தில் உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வொன்ற பெற்றுக்கொடுக்குமாறும் அமைச்சர் சாகல ரட்நாயக்காவுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

If there is a law and order in the country, you should not blame Sagala Ratnayake. Yahapalanaya duty is to ensure a law and order in the country.
ReplyDelete