Header Ads



தெஹி­வளை - பாத்யா பள்­ளி­வாசல் தொடர்பில், இன்று பாராளுமன்றத்தில் முக்கிய கூட்டம்

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

தெஹி­வளை - பாத்யா மாவத்தை பள்ளிவாசலுக்கு பௌத்த இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல், பள்ளிவாசல் விஸ்த்தரிப்புக்கு பொலிஸார் விடுத்துள்ள தடை குறித்து இன்று வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் சார்பில் இதில் பங்கேற்கவுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்த மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், இந்தப் பேச்சு வெற்றியளிக்காத பட்சத்தில் தம்மிடம் மாற்றுத் திட்டம் உண்டு எனவும் கூறினார்.

முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது உரிமைகளை விட்டுக்கொடுக்கக்கூடாதென்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதாகவும், தெஹி­வளை பள்ளிவாசல் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு பொலிஸார் அநீதி இழைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கருத்துக்கூறிய முஜீபுர் ரஹ்மான்,

இந்தக் கூட்டம் முக்கியத்துவமானது. இவ்விடயத்தில் தனக்கு பிரதமரிடமிருந்து நெருக்கடி ஏற்பட்டதாக அமைச்சர் சாகல ரட்நாயக்கா குறிப்பிட்டார். அந்தவகையில் இன்றைய கூட்டத்தில் தெஹி­வளை - பாத்யா மாவத்தை பள்ளிவாசல் தொடர்பில் சாதகமான பதில் கிட்டுமென தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

2 comments:

  1. Where is the law and order in the Yahapalanya?

    ReplyDelete
  2. I think the presence of law and order in Good governance is relatively better than before. We sent representatives to the parliament on behalf of us hence we need to rip them instead of Maithree/Ranil/Good governance. After all, how eligible are we to blame Maithree/Ranil/Good governance for repeatedly and INSANELY sending the same representatives VERY WELL KNOWING THAT THEY NEVER DID anything worthwhile and WILL NEVER DO???

    ReplyDelete

Powered by Blogger.