Header Ads



"ரஞ்சன் ராமநாயக்க, சிறைக்குச் செல்லவுள்ளார்"

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சிறைக்குச் செல்ல உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

நீதிமன்றினை அவமரியாதை செய்த காரணத்தினால் இவ்வாறு சிறைக்குச் செல்ல நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணிகளும் நீதவான்களும் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு பேணி வருவதாக ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் -22- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வானொலி சேவை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாகவும் அது குறித்த ஒலிப் பதிவு தம்மிடம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தாம் டிபென்டர் ரக வாகனத்தைப் பயன்படுத்தவில்லை எனவும் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சரே அதனைப் பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.