Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு 8 நாள் கால அவகாசம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு 8 நாள் கால அவகாசம் உள்ளது. மத்திய வங்கி மோசடிக்கு பங்குதாரராவதா? அல்லது குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பதா? என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் என கூட்டு எதிர் கட்சி குறிப்பிட்டுள்ளது. 

நல்லாட்சி அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் எல்லை கடந்து செல்கின்ற நிலையில் சர்வதேசத்திடம் முறையிடவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் கூட்டு எதிர்கட்சி குறிப்பிட்டுள்ளது. 

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துடன் எதிர்கால இலக்குகளை அடைவதற்கு அரசியல் வியூகங்கள் வகுத்து செயற்படுகின்றோம். அவை அரசியல் இரகசியங்கள். இவற்றை தற்போது வெளியிடுவது எதிரிகளுக்கு வாய்ப்பாகி விடும். எனவே தகுந்த தருணத்தில் வலுவாக பகிரங்கமாக வெளிப்படுவோம் எனவும் கூட்டு எதிர் கட்சி குறிப்பிட்டுள்ளது. 

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று -22- இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.