விஜித்த ஹேரத்தும், மூக்குடைபட்ட விமலும்..!!
-நஜீப் பின் கபூர்-
பெலவத்தையில் உள்ள தமது கட்சி செயலகத்தில் நெடுநேரம் கட்சிப் பணிகளை செய்து விட்டு தனது வீட்டை நோக்கி பயணிக்கின்ற போது மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் பிரயாணம் செய்த கெப் வண்டி சடுதியாக குறுக்கருத்த ஒரு மனிதரைக் காப்பாற்றப் போன இடத்தில் பக்கத்தில் இருந்த தொலைத் தொடர்புக் கம்பத்துடன் மோதியதில் கம்பம் முறிந்து வண்டி மேல் விழுந்ததில் வண்டிக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விஜித ஹேரத் குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தக்கு மற்றுமன்றி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் தகவல்களைக் கொடுத்ததுடன் பொலிசார் அந்த இடத்துக்கு வரும்வரை பக்கத்தில் இருந்த பாதுகாப்புக் காவலரணில் அவர் நின்று கொண்டிருந்தார். பொலிசார் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் நடந்ததை அறிந்து கொண்டதும் விமல் மற்றும் மஹிந்த விசுவாச இணையத்தளங்கள், ஊடகங்கள் மற்றுமன்றி முகநூல்களும் விஜித ஹேரத்துக்கும் ஜேவிபிக்கும் சேறு பூசுகின்ற நடவடிக்கைகளை பிரேக் நியூசாக வெளியிட்டுக் கொண்டிருந்தன.
அவை அனைத்தும் மது போதையில் விஜித வாகனத்தை செலுத்திச் சென்ற போது இந்த விபத்து நடந்தது, பொலிசாரும் இதனை உறுதி செய்திருக்கின்றனர். விஜித அரசுக்கு சொந்தமான வாகனத்தை ஓட்டிச் சென்ற போதே இந்த விபத்து நடந்திருக்கின்றது என்று அவர்கள் தொடர்ச்சியாகச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.
நீதி மன்றமும் வைத்திய அறிக்கைகளும் இது முற்றிலும் பொய்யான செய்திகள் என்று உறுதி செய்து விஜித ஹேரத்தை இந்தபோதைக் குற்றச்சாட்டிலிருந்து நிரபராதியாக்கி அவரை விடுதலை செய்ததுடன் குறிப்பிட்ட தொலைபேசிக் கம்பத்திற்கான நஷ்ட ஈட்டை அவர் ஏற்கெனவே அந்த நிறுவனத்திற்கு வழங்கியும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் செலுத்திய வாகனம் அரசுக்குச் சொந்தமானது என்ற குற்றச்சாட்டும் முற்றிலும் பொய் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இந்த வாகனம் விஜித ஹேரத் பெயரில் 2014 முதல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
அரசியல் வஞ்சகத்தன்மையுடன் செய்திகளை வெளியிட்ட மஹிந்த-விமல் விசுவாச ஊடகங்கள் இப்போது இந்த விடயத்தில் மூக்குடைபட்டிருக்கின்றன. இதிலிருந்து ஊடகங்கள் எவ்வாறெல்லாம் நயவஞ்சகத் தன்மையுடன் நடந்து கொள்ள முடியும் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம்.

MEDIA FOR SALE MEDIA FOR MONEY
ReplyDeleteWimal is a hypocrite and a consummate liar. It is an island-known matter.
ReplyDelete