Header Ads



சக்திவாய்ந்த குடியுரிமை பெற்ற ,குடிமக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியல் - இலங்கை 129

உலகிலேயே சக்திவாய்ந்த குடியுரிமை பெற்ற குடிமக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியில் குடிமக்களின் பங்களிப்பு மற்றும் வெளிநாடுகளில் குடியேறி பணிசெய்ய அதிக வாய்ப்புகளை பெற்ற குடிமக்களை கொண்ட நாடுகள் குறித்து கடந்த 2015ம் ஆண்டு ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள 161 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்பது, மனிதவள மேம்பாட்டிற்கு துணி நிற்பது உள்ளிட்ட அம்சங்களையும் மற்றும் விசா இல்லாமல் வெளிநாடுகளில் பணிபுரிய எந்த நாட்டு குடிமக்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் சக்திவாய்ந்த குடியுரிமை பெற்ற குடிமக்கள் வசிக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல்:

ஜேர்மனி
டென்மார்க்
பின்லாந்து
நோர்வே
ஐஸ்லாந்து, ஸ்வீடன்
ஆஸ்திரியா, அயர்லாந்து
பிரான்ஸ்
சுவிட்சர்லாந்து
நெதர்லாந்து
பெல்ஜியம்

இதே வரிசையில் பிரித்தானியா (11வது இடம்), அமெரிக்கா (28வது இடம்), கனடா (32வது இடம்), அவுஸ்திரேலியா (33வது இடம்), இந்தியா (102வது இடம்) மற்றும் இலங்கை (129வது இடம்) ஆகிய இடங்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.