எர்துகானின நம்பிக்கைக்கு, கல்லறை கட்டுவோம் - பஷார் அல் அசாத்
சிரியாவில் நடைபெறுவது தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று, அதிபர் பஷார் அல் அசாத் கூறியுள்ள போரை தொடர்ந்து நடத்துவதில் தீர்க்கமாக இருப்பதை அவர் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
சிரியாவின் தீவிரவாதத்திற்கு எதிரான போர் தொடரும் - பஷார் அல் அசாத்
பல்மைரா நகரை மீட்டதைபோல சிரியாவின் ஒவ்வொரு அங்குல நிலப்பகுதியையும் அரசப் படை மீட்டெடுக்கும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அசாத் கூறியுள்ளார்.
பல கிளர்ச்சி குழுக்களுக்கு ஆதரவு அளித்து வரும் துருக்கி அதிபர் ரசீப் தையிப் எர்துவானை கடும் சொற்களால் அசாத் பேசியுள்ளார்.
அலெப்போ நகரம், சிரியாவில் எர்துவான் கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்கு கல்லறை கட்டுவதாக அமையும் என்று அசாத் கூறியுள்ளார்.

Post a Comment