கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்க, இரத்த மாதிரி தேவை - முஸ்லிம்களுக்கு எதிராக சீனா கொடுரம்
சீனாவின் வடமேற்கு பிராந்தியமான முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஷின்ஜியாங்கை சேர்ந்தtHகள் பயண ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும்போது டிஎன்ஏ மாதிரிகள் மற்றும் பிற உயிரியல் தரவுகளை வழங்க வேண்டுமென காவல்துறை தெரிவித்துள்ளது.
ஈலி பிரதேசவாசிகள் கடவுச் சீட்டு மற்றும் சில விசாக்களுக்கு விண்ணப்பிக்க இரத்த மாதிரிகள், கைரேகைகள், ஒலிப் பதிவுகளை வழங்க வேண்டியுள்ளது
முக்கியமாக ஈலி முஸ்லீம் பிரதேசத்தில் வசிப்போர் கடவுச் சீட்டுகள் மற்றும் சில விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது இரத்த மாதிரிகள், கைரேகைகள் மற்றும் ஒலிப் பதிவுகளை வழங்க வேண்டுமென காவல்துறை தெரிவித்துள்ளது.
சீன அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக சின்ஜியாங்கில் வாழும் முஸ்லீம்கள் கூறுகின்றனர்
சீன அதிகாரிகள் தங்களுக்கு பாரபட்சம் காட்டுவதாகவும், அவர்கள் பயணம் மேற்கொள்ள ஆவணங்களை வழங்குவதற்கு அதிகாரிகள் அடிக்கடி மறுப்பதாகவும் சின்ஜியாங்கில் வாழும் முஸ்லீம்கள் பலர் கூறுகின்றனர்.
இந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி

Post a Comment