Header Ads



ஐக்கிய தேசியக் கட்சி இல்லை என்றால், நாடு முன்னோக்கி செல்லாது - ரணில்


ஐக்கிய தேசியக் கட்சி இல்லை என்றால், நாடு முன்னோக்கி செல்லாது எனவும் நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடந்துள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே செய்தது.

நாட்டை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியை சூழ இணைய வேண்டும் எனவும் பிரதமர் குறி்ப்பிட்டுள்ளார்.

இணையத்தளம் வழியாக கட்சியின் அங்கத்துவத்தை பெறும் முறையை அறிமுகம் செய்யும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தை பெறுவதற்காக அந்தகட்சி அப் (APP) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதில் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிந்து கொள்ளவும் கட்சி ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளை நேரடியாக பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.