Header Ads



எங்களுக்கு இருப்பதற்கு ஒரு வீடு இல்லை - எமக்கு மீண்டும் ஒரு காலம் வரும் - நாமல்

 இந்தியாவில் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, வர்த்தகர்கள் தமது திட்டங்களுக்கு ஒப்புதல் பெற ராகுல் காந்திக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச கூறியுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ராகுல் காந்தி அப்படி இலஞ்சம் பெறுவது நல்லது என்றால், ஏன் தான் சிறிய இலஞ்சத்தை பெற்ற என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.நாமல் ராஜபக்ச தனக்கு நெருக்கமான இளம் வர்த்தகர் ஒருவரிடமே இதனை கூறியுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள இளம் வர்த்தகம், இந்திய ஊடகங்கள் எதுவும் ராகுல் காந்தி லஞ்சம் பெற்றார் என்று குற்றம் சுமத்தவில்லையே எனக் கூறியுள்ளார்.தொடர்ந்தும் பேசியுள்ள நாமல்,

இந்திய ஊடகங்கள் காந்தியினருக்கும் பயம் என்பதால் குற்றம் சுமத்துவதில்லை. அப்படி குற்றம் சுமத்தினால் வெள்ளை வானில் தான் செல்ல வேண்டும்.

ராஜபக்சவினர் காந்தியினரை விட ஜனநாயகவாதிகள் என்பதால், எவரும் எதனையும் கூற இடமளித்துள்ளோம்.நாங்கள் சம்பாதித்துள்ளோம் என்று கூறினாலும் எங்கள குடும்பத்தில் உள்ள 5 பேர் இருப்பதற்கு ஒரு வீடு இல்லை.

ஆட்சியில் இருக்கும் போது இது குறித்து அப்பாவிடமும் அம்மாவிடம் பல முறை கூறினேன். நாட்டை அபிவிருத்தி செய்யவே அவர்கள் தம்மை அர்ப்பணித்தனர்.

அம்மாவின் சித்தி (சிறிய பாட்டி) தனது பணத்தில் கொள்வனவு செய்த 14 காணிகளுக்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் யோஷித தம்பியை பிடித்து கொண்டுள்ளனர்.

எமக்கு சேறுபூச இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது. எமக்கு மீண்டும் ஒரு காலம் வரும். அப்போது நாங்கள் இவற்றுக்கு பதிலளிப்போம் என நாமல் ராஜபக்ச தனது வர்த்தக நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. பெரிய பரிதாபமாக இருக்கிறதே! அன்று நாட்டுக்கே சொந்தக்காரர்களாக இருந்தார்கள், இன்று இந்த நிலையா? அஞ்சத்தேவையில்லை நமது அரசு உங்களை கரை சேர்த்து விடும்!

    ReplyDelete
  2. "Engalukkum kaalam varum
    Kaalam vanthaal vaalvu varum
    vaalvu vanthal anaivarayum
    palivaanguvomey"

    ReplyDelete
  3. "ராகுல் காந்தி அப்படி இலஞ்சம் பெறுவது நல்லது என்றால், ஏன் தான் சிறிய இலஞ்சத்தை பெற்ற என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளா"

    இலஞ்சத்தில் ஏது சார் சிறிய இலஞ்சம் , பெரிய இலஞ்சம்?
    இது ஒன்றே்போதாதா இவனை ஓரம்கட்ட? எங்க நம் இலங்கையர்கள் தானே மாங்காமடையர்கள்... அரசியல்வாதிகளை நாட்டை சுரண்டி ஆட்டிப்படைப்பவர்களாய் மாற்றுகிறார்கள்... அவன் எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ அந்த கட்சிக்கு தாவி " பழைய குருடி கதவ தொரடி" என்று சொல்லி எல்லாவற்றையும் ஆட்டையபோடுறானுவல்....
    நாமும் "ஆஆஆஆஆ" என்று வாயை பிழந்து பாத்துகிட்டு இருக்கோமே தவிர அவர்களை தேர்தலில் தோற்கடிக்காமல் மீண்டும் மீண்டும் வெற்றிபெற செய்கிறோம்...

    ReplyDelete
  4. அப்படி வந்தால் அது இலங்கை மக்களின் கேடுகெட்ட காலமாக இருக்கும்!

    ReplyDelete

Powered by Blogger.