தலையை காண்பித்த ஞானசாரர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் நலன் அறியும் நோக்கில் கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று வெலிகடை மெகசீன் சிறைச்சாலைக்கு சென்று அவரை சந்தித்துள்னர்.நாடாளுமன்ற உறுப்பினர்களாக தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, சிசிர ஜயகொடி, டளஸ் அழகப்பெரும ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவின் வாகனத்தில் முதலில் சிறைச்சாலைக்கு சென்றனர்.
இதன் பின்னர், குமார வெல்கம, மகிந்த யாப்பா அபேவர்தன, காமினி லொக்குகே, பிரசன்ன ரணவீர, ஷெயான் சேனசிங்க, கனக ஹேரத் ஆகியோர் தனித்தனியாக சிறைச்சாலைக்கு சென்றனர்.
இவர்களை தவிர பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, மேல் மாகாண சபை உறுப்பினர் ரஜித அப்புவாராச்சி, முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித ராஜபக்ச ஆகியோரும் கம்மன்பிலவை சந்திக்க சென்றிருந்தனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவையும் இவர்கள் சந்தித்துள்ளனர்.
Birds of the same feather flock together
ReplyDelete