மாணவிக்கு ஆசிரியை வழங்கிய, விசித்திரத் தண்டனை - விசாரணை ஆரம்பம்
தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் 10 தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு ஆசிரியையொருவர் புதுவிதமான தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சக மாணவி மீது பேனையால் கீறியமைக்கு தண்டனையாக மற்ற மாணவர்களைக் கொண்டு 'நான் முட்டாள்' என்று பேனையால் மாணவியின் உடலில் எழுதியதாக இந்த ஆசிரியை மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் தன்னுடைய அலைபேசிக்கு மேற்கொள்ளப்பட்ட அழைப்பொன்றில் தெரிவிக்கப்பட்டதாக தம்புள்ளை வலயக் கல்வி பணிப்பாளர் டபிள்யூ.எம்.ஐ.ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணைகயை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
Post a Comment