முஸ்லிம்களுக்குப் பேரிழப்பு
-M.I.Mubarak-
பிரிட்டனில் சிறுபான்மை இன மக்களுக்கு சார்பாக செயற்பட்டு வந்த-அகதிகளுக்கு பிரிட்டனில் இடம் கொடுக்க வேண்டும் என்று கூறி வந்த பிரிட்டிஷ் எம்பி ஜோ கொக்ஸை அந்த நாடு இப்போது இழந்துள்ளது.
அவரது செயலாளராக இருந்தவர் படத்தில் உள்ள பசீலா அஸ்வத் என்ற முஸ்லிம் யுவதியாகும்.இந்த யுவதியின் மடியில்தான் ஜோ கொக்ஸின் உயிர் பிரிந்தது.அவர் சுடப்பட்டபோது கொலையாளியிடம் இருந்து ஜோவை காப்பாற்றுவதற்காக பசீலா கடுமையாகப் போராடினார்.இருந்தும்,முடியவில்லை.
ஐ.எஸ்.போன்ற முஸ்லிம் பெயர் தாங்கிய பயங்கரவாதிகளால் மேற்கு நாடுகளில் அப்பாவி முஸ்லிம்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் சிறுபான்மை இன மக்களுக்கு சார்பான நிலைப்பாட்டை உடைய ஜோ கொக்ஸ் போன்ற அரசியல்வாதிகளின் இழப்பு முஸ்லிம்களுக்குப் பேரிழப்பாகும்.

Inna ilahi wa inna irajiun
ReplyDelete