Header Ads



"மஹிந்த ராஜபக்ஷ வெளியேற்றப்படுவார்"


மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஆரம்பித்தால் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெ ளியேற்றப்படுவார் என திட்டவட்டமாக தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக, 

புதிய கட்சிகள் எத்தனை தலையெடுத்தாலும் அது சுதந்திரக் கட்சிக்கு சவாலாக அமையாது என்றும் அவர் தெரிவித்தார். 

ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ உட்பட பொது எதிர்கட்சியினை சார்ந்தோர் ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போது, உள்ளூராடச்சி சபை தேர்தலுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுமென்றும், 

அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தமது புதிய கட்சியின் சார்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அபேட்சகர்கள் கருத்து வெ ளியிட்டுள்ளதோடு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தோர் பலர் தம்மோடு இணையவுள்ளதாகவும், தேர்தலில் வெற்றிபெறுவோம் என்றும் ஜப்பானில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கேட்டபோதே அமைச்சரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.