அதாவுல்லாவுடன் ஜனாதிபதி மைத்திரி உடன்பாடு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 கட்சிகளுடன் உடன்படிக்கை ஒன்றை இன்று -11- காலைஏற்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையானது ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில்மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாகவே இந்த உடன்படிக்கைகைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றுஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது கட்சியை விரிவாக்கும் நோக்கில் குறித்த கட்சிகளுடன் உடன்படிக்கைகளைஏற்படுத்திக் கொள்ள ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையில் இலங்கை தொழிலாளர் காங்கிஸின் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம்தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாமற்றும் அதாவுல்லாஹ் தேசியகாங்கிரஸ் உடனும் ஜனாதிபதி உடன் படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment