Header Ads



துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஒருவர், முதல் தடவையாக இலங்கைக்கு வருகிறார்

இலங்கைக்கான விஜயத்தினை துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஒருவர் முதல் தடவையாக மேற்கொள்ள உள்ளதாக இலங்கையில் அமைந்துள்ள துருக்கி நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இரண்டு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தினை துருக்கி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மெவுலட் கெவுசொக்ளு எதிர்வரும் 14 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது துருக்கி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் போன்றோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.