Header Ads



உதய கம்பன்பிலவின் கைது - அவுஸ்திரேலியர் தெரிவித்துள்ள கருத்து (வீடியோ)

நிதி மோசடி தொடர்பிலேயே உதய கம்பன்பிலவிற்கு எதிராக முறைப்பாடு செய்ததாகவும், அதில் அரசியல் நோக்கம் இல்லை எனவும் அவுஸ்திரேலிய பிரஜையான பிராயன் ஷெடிக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பார்ப்பதற்காக எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் இன்று கொழும்பு மெகஸின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தனர்.

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான நிறுவனமொன்றின் 11 கோடி ரூபா பெறுமதியான பங்குகளை போலியான அனுமதிப்பத்திரம் மூலம் விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உதயகம்மன்பில நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டாரர்.

இன்று மெகஸின் சிறைச்சாலைக்குச் சென்று அவரை பார்வையிட்ட எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் ஊடங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

இதேவேளை கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவுஸ்திரேலிய வர்த்தகரான பிராயன் ஷெடிக் ஸ்கைப் ஊடாக இது குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். வீடியோ

1 comment:

  1. NATUKAGA JAIL PONARU ENRU MAHINDA SOLLUVARA ADUTHU VEERA

    ReplyDelete

Powered by Blogger.