Header Ads



மினாரத்தை பௌத்தர்களுக்காக விட்டுக்கொடுக்கலாமா..?

-கண்டியிலிருந்து நஜீப் பின் கபூர்-

கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.06.2016) அன்று 50 அல்லது 60 பேர் அளவிலான குழுவொன்று, நாட்டு மக்களுக்கு நன்கு பரிச்சிதமான கண்டி போகம்பரை சிறைக் கூடம். இதற்கு எதிர் பக்கத்தில் அமைந்துள்ளது கண்டி லைன் பள்ளிவாயில். தற்போது அங்கு  'மினரா' கட்டி யெழுப்பப்படுகின்றது, அதனை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. உடனடியாக அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோசத்துடன் சிறைச்சாலைக்கும் லைன் பள்ளிக்கும் இடையில் உள்ள வீதியில் கூப்பாட்டுடன் இந்தப் பாதையால் வாகனங்கள் செல்வதைத் தடை செய்கின்றது ஒரு கூட்டம்.

சம்பவ இடத்திற்கு வருகை தருகின்ற பொலிசார் வாகனங்களை மாற்றுவழி ஊடாகத் திசை திருப்பி நகரப் போக்குவரத்தை சரி செய்கின்றார்கள்.

மினராவைக் கட்டி எழுப்பக் கூடாது என்று வீதிக்கு குறுக்கே நின்றவர்கள் அன்று காலை மு.ப.9 மணியளவில் துவங்கிய தமது போராட்டத்திற்கு சாதகமான பதில் கிடைக்காத வரை தாம் வீதியை விட்டு அகலப்போவதில்லை என்று உறுதியாய் நின்றிருந்தனர்.

பி.ப 2 மணியளவில் நகர சபையிலிருந்து போராட்டக்காரர்களுக்கு எழுத்து மூலமாகக் கிடைக்கின்ற மினராவுக்கான தடை உத்தரவு வாக்குறுதியைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து செல்லும் போது, அந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய பௌத்த பிக்கு இதன் பின்னர் ஒரு செங்கல்லாவது உயர்த்தப்படுமாயின் மினரா மட்டுமல்ல இங்கு ஒரு பள்ளிவாயில் இருந்ததற்கான அடையாளத்தையே இல்லாமல் ஆக்கி விடுவோம் என்ற பெரிய எச்சரிக்கையை விடுத்து அங்கிருந்து கலைந்து செல்கின்றது அந்தச் சின்னக் கூட்டம்.! எனவே அவர்களின் வார்த்தைக்கு தெளிவான விளக்கத்தைக் கொடுப்பதாக இருந்தால் கண்டி லைன் பள்ளிவாயிலை நாம் தரை மட்டமாக்கி விடுவோம். இதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பின்னணியில் முஸ்லிம் சமய விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஹலீம் தலைமையில் கண்டி பள்ளிவாயில்களின் நிருவாகிகள், உலமாக்கள், அரசியல்வாதிகள்  என்ற  குழு முக்கிய பௌத்த பீடாதிபதியைப் போய் சந்தித்திருக்கின்றனர். அங்கு இவர்கள் இதற்கு ஒரு நியாயத்தை எதிர்பார்த்துத்தான் போய் இருக்க வேண்டும்! அப்படிப் போன இடத்தில் பௌத்த குருமார் கடுமையான நிலைப்பாட்டில் நின்று தமது கண்டனங்களை -எரிச்சலை வெளிப்படுத்திய  போது, இவர்கள் அங்கு வாயடைத்து நின்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது என்று பௌத்த தரப்பிலிருந்து எமக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது. பள்ளிவாயில் சார்பில் போனவர்களும் அவர்கள் கடும் போக்கில் இருந்தனர் என்பதனை உறுதி செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் ஒரு உலமா (கண்ணியமான குருவே) 'சுவாமின்வான்சே' உங்கள் கருத்துக்கு மாற்றமாக இதன் பின்னர் நாம் எதுவும் செய்ய மாட்டோம். மினரா கட்டுவதை நிறுத்திக் கொள்கின்றோம். என்று அங்கு உறுதிபடக் கூறிய போது முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலிம் அங்கு சாட்சியாக இருந்தார். அத்துடன் இதுவரை மினரா கட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.   பௌத்த தலைவர்களின் முன்னால் உங்கள் கருத்துக்களை நாம் ஏற்று நடப்போம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதனை ஊடகங்கள் முழு உலகிற்கும் காட்சிப்படுத்தியும் இருக்கின்றது.

எனவே இந்த லைன் பள்ளி விவகாரத்தில் இதற்குப் பின்னர் மினரா கட்டி எழுப்புவதற்குள்ள உரிமைக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. எனவே தான் அவர்கள் அங்கு நடந்து கொண்ட விதம் தொடர்பாகவும் கொடுக்கப்பட்ட வாக்குறுதி தொடர்பாகவும் சமூகத்தின் மத்தியில் கண்டன அறிக்கைகள் தற்போது  வெளியிடப்பட்டு வருக்கின்றன. இந்த நடைமுறை எதிர்வரும் காலங்களில் பிழையான ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் என்றுr5fம் அச்சம் கொள்ள வேண்டி இருக்கின்றது.

நாட்டில் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கின்ற பௌத்த விகாரையை விட முஸ்லிம் பள்ளிவாயில்கள் உயரமாக எழுப்பப்படக் கூடாது என்ற கோஷங்களை இனவாதிகள் எதிர்வரும் காலங்களில் முன்வைக்க இந்த விவகாரம் முன்னுதாரணமாக அமையலாம். அத்துடன் இதன் பின்னர் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் எப்படிக் கட்டப்பட வேண்டும் எப்படி முஸ்லிம்கள் தங்களுடைய கலை, கலாச்சாரங்களை பின்பற்றவது  என்பதிலும் பௌத்த குருமார்களின் அங்கிகாரம் பெறப்பட வேண்டும் என்ற நிலை தோன்றவும் இந்த சரணாகதி-தலைகுனிவு முன்னுதாரணமாக அமையலாம்! எனவே முஸ்லிம்களின் பள்ளிவாயில்களை நிறுவுவது அதன் வடிவமைப்புக்களைத் தீர்மானிப்பது என்பதை இது வரை முஸ்லிம்களே தீர்மானித்து வந்திருக்கின்றார்கள்.

இதில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் சட்டரீதியாகப்   பௌத்த குருமாருக்குக் கிடையாது. எனவே இந்த சம்பவத்தின் மூலம் அவர்களுக்கு அதற்கான அங்கிகாரத்தைக் கொடுக்கின்ற ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க வேண்டும். வீதியில் போகின்ற பாம்பை சீலைக்குள் போட்ட கதைபோல்தான் இது இருக்கின்றது. இந்த மினரா பணிகளை  அரைகுறையாக வைத்துக் கொண்டிருக்காமல் பூர்த்தி செய்யும் படி முன்னாள் கண்டி நகர முதல்வர் மஹேன் ரத்வத்தை கூட இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறி இருந்தார் என்று முஸ்லிம்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் அவர் அதனை இப்போது மறுக்கின்றார். அப்படி அவர் கூறி இருந்தால் அவர் பதவியில் இருக்கின்ற நேரத்தில் அவரின் அங்கிகாரத்துடனே இதனை செய்து முடிக்காமல் போனது ஏன் என்று கேட்கத் தோன்றுகின்றது.

இந்த நெருக்கடியான கட்டத்தில் முன்னாள் மேயர் கூறினார் என்று முஸ்லிம்கள் பௌத்த மக்களிடம் அவரைக் காட்டிக் கொடுக்க முனைந்தால் இவர் இன்று முஸ்லிம்கள் தரப்பு சாட்சியாளராக அவர் ஒரு போதும் ஆஜராக மாட்டார் என்பதனை முஸ்லிம் நிருவாகிகள் புரிந்து கொள்ள வேண்டும். இத்தனைக்கும் இப்போது அவர் ஒரு தியவடநிலமே பௌத்த விகாரையின் முக்கிய நிருவாகி.! தற்போது இனவாதிகள் தரப்பில் முன்வைக்கப்படுகின்ற முக்கிய பிரச்சினை லைன் பள்ளிவாயில் மினரா பௌத்த மக்களின் பிரதான புனித தளமான தலதா மாளிகையைவிட உயரமாகப்போகின்றது என்பதாகும். இதனைத்தான் நாம் ஆட்டுக் குட்டி ஓ நாய் கதை என்று கூறுகின்றோம். அது என்ன கதை என்று இப்போது பார்ப்போம்.

தலதா மாளிகையை விட  எந்தக் கட்டடங்களும் உயரக் கூடாது என்பது சட்டம் சாராத அவர்கள் விதி (அச்சுறுத்ல்) என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் இன்று கண்டியில் அமைந்துள்ள பிரசித்தமான சிடி சென்றர் இந்த பள்ளிவாயில் கட்டப்பட்ட பின்னர் அமைக்கப்பட்ட ஒரு கட்டிடம். அத்துடன் அது ஒரு களியாட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடமும் கூட.! அந்த கட்டடிம் கட்டப்பட்டபோது இந்த உயரம் பற்றிய கேள்விகள் இதற்கு எழுப்பப்பட வில்லை. எனவே முற்றிலும் இனவாதம் தொடர்பான ஒரு அட்டகாசம் என்றுதான் இதனைக் குறிப்பிட வேன்டும். கண்டிக்குப் போகின்ற ஒரு குருடன் கூட இந்த உயரம் தொடர்பான மதிப்பீட்டை அளவீடு செய்து கொள்ள முடியும்.

தற்போது பள்ளி நிருவாகம் வடிவமைத்துள்ள மினரா பிலிமத்தலாவையிலுள்ள ஒரு பித்தளை  வேலைத் தளத்தில் தற்போது தயார் செய்யப்பட்டிருக்கின்றது. எனவே அதனை அங்கு எடுத்து வந்து பொறுத்தினாலும் அதன் உயரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிடி சென்றரின் உயரத்தை விட 20 அல்லது 25 அடிகள் குறைவாகவே இருக்கும். எனவே இது முற்றிலும் ஆட்டுக்குட்டி ஓ நாய் விவகாரம் என்பது நடுநிலையான பௌத்த மக்களுக்கும் நன்கு புரியும்.

எனவே இந்த நாட்டு அரசியல் அமைப்புக்கும் மனித உரிமை விவகாரங்களுக்கும் முற்றிலும் முரண்பட்ட ஒரு வாதத்தையே இந்த இனவாதிகள் முன்வைக்கின்றார்கள். ஆனால் இன்று அவர்களின் இந்த அநியாயமான கோரிக்கைக்கு முஸ்லிம்கள் தரப்பில் அங்கிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.  இதிலுள்ள துரதிஷ்ட நிகழ்வு முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீமும் இதற்கு அங்கு சாட்சியாக நின்றிருக்கின்றார். அப்போது இப்போது முஸ்லிம் களுக்குள்ள அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதற்கு நம்மவர்களே உடந்தை என்ற நிலை! இந்த விவகாரம் இப்படி இருக்க இந்த லைன் பள்ளி வரலாறு என்ன என்று சற்றுப் பார்ப்போம். இது சிங்கள மன்னர் காலத்தில் கொடுக்கப்பட்ட நிலம் என்று சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் பிழையான ஒரு தகவல்.

பிரித்தானிய படையில் குறிப்பாக தீயனைக்கும் பிரிவில்  பணியாற்ற அழைத்து வரப்பட்ட மலே இன முஸ்லிம்கள் தங்களது வழிபாட்டிற்காக   பிரித்தானிய ஆட்சியாளர்களினால் 1905 ம் ஆண்டு வழங்கப்பட்ட இடம்தான் இந்த லைன் பள்ளிவாயில். (இன்றும் தீயணைக்கும் பிரிவு இந்தப் பள்ளிவாயிலுக்கு அருகாமையில் இருக்கின்றது.)  இதற்கான ஆதாரங்கள் பள்ளி  நிருவாகிகளிடத்தில் இருக்கின்றது என்பதனை அவர்கள் உறுதி செய்கின்றார்கள். எனவே பௌத்த பீடாதிபதியுடன் சந்திப்பில் அங்கிருந்த ஒரு பௌத்த பிக்கு இது 1956ம் ஆண்டில்தான் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது என்று கூறுகின்றார். இது முற்றிலும் பொய்யானது. இதன் இயற்பெயர் மலே பள்ளி வாயில் என்பதாகும் இதனை லைன் பள்ளி என்று மாற்றி அமைத்தது யார் பார்த்த வேலை என்று தெரியவில்லை. அது முஸ்லிம்கள் ஒரு பிரிவின் வேலை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் இந்தப் படைப் பிரிவில் பணிபுரிந்து முக்கிய ஒரு மலே இனத் தளபதி மரணித்த போது அவரது நல்லடக்கம் இந்த இடத்தில் நடந்திருப்பதுடன் அதற்கான கல்லறையும் இன்று இங்கு காணப்படுகின்றது.

புகழ் பெற்ற போகம்பரை சிறைக்கூடம் அன்று பிரித்தானிய படை முகாமாக இருந்தது. அதனால் அங்கு பணியாற்றுகின்ற மலே முஸ்லிம்களுக்கு வழிபட அருகிலுள்ள இந்த இடம் வழங்கப்பட்டது என்றும் சிலர் குறிப்பிடுகின்றார்கள். இந்தக் கூற்றும் பிழையானது 1876 போகம்பரை சிறைச்சாலை திறக்கப்பட்டிருக்கின்றது. எனவே போகம்பரை சிறைக்கூடம் அன்று பிரித்தானிய படைமுகாம் என்ற கருத்து தவறானது.

1980களில் இருந்த பள்ளிவாயிலை அகற்றி விட்டு புதிய பள்ளிவாயிலை நிருமானிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகின்றது. அந்த கட்டிட நிர்மானப் பணிகள் நடக்கின்றபோது அந்தப் பள்ளி வாயில் அமைந்திருந்த வளவுக்குள் மலே, பறங்கி, பௌத்த என்று மூன்று குடும்பங்கள் பள்ளிவாயிலுக்கு வாடகை செலுத்திக் கொண்டு வளவுக்குள்  இருந்திருக்கின்றது. அவர்கள் புதிய பள்ளி நிர்மானப் பணிகளுக்கு இடஞ்சலாக இருந்ததால் பள்ளி நிருவாகம் நீதி மன்றத்தை நாடி அவர்களை வெளியேற்ற முயன்றிருக்கின்றது. நீதி மன்றம் அந்த இடத்தில் இருக்கின்றவர்கள் வெளியேற வேண்டும். இது பள்ளிக்குச் சொந்தமான இடம்  என்று தீர்ப்பு வழங்கிய போதும் அவர்கள் அங்கிருந்து வெளியேற வில்லை.

இவர்களை வெளியேற்ற  பள்ளி நிருவாகம் அழுத்தங்களைக் கொடுத்த போது அன்று வாடகைக்கு இருந்தவர்கள் பௌத்த குருமாரிடம் தங்களுக்கு நியாம் கேட்டு சென்றிருக்கின்றார்கள். அப்போது குடியிருப்பாளர்கள் வீட்டுக்கு முன்பாக வம்புக்காக புத்த  பெருமானின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. பின்னர் பள்ளி நிருவாகம் இந்த இடத்தில் இருந்து மூன்று குடும்பங்களுடன் இணக்கப்பட்டுக்கு வந்து அவர்கள் கேட்ட நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்கி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பள்ளி நிர்மானப் பணிகளை முன்னெடுத்திருக்கின்றது.

இவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கைவசம் இருக்கின்றது என்று இந்த விடயத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட ஒரு முக்கிஸ்தர் ஒருவர் கட்டுரையாளனிடத்தில் உறுதி செய்கின்றார். அன்றும் இந்த மினரா விவகாரம் பிரச்சினை பௌத்த தரப்பில் இருந்து எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கட்டப்பட்ட சிடி சென்றர் தலதா மாளிகையை விட உயர்ந்து சென்றபோது இந்த இனவாதிகள் கண்டு கொள்ள வில்லை. அது பௌத்தர் ஒருவருடைய கட்டிடம் என்பதால் அவர்கள் அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கக் கூடும். எனவே அடிப்படை உரிமைகள் பறிபோகுமிடத்தில் அதற்கான நியாயங்களைப் பெற்றுக் கொள்கின்ற இடங்களை முஸ்லிம்கள் நாடவேண்டுமே அன்றி மாற்றுவழிகள் ஊடாகப் பிரச்சினைகளை அணுகி முட்டிக்குனிகின்ற வேலையைச் செய்யக் கூடாது என்று நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

5 comments:

  1. I think minaret can be compromised but NOT SALAH, NOT A MUSLIM LIFE and NOT THE HOUSE THEY LIVE IN. Let's see how many of us remember Beruwela, Aluthgama incidents? And think how many of us had the capacity to battle against it as an individual? Just dying by the hands of a 'Kuffar' is okay than dying as a 'Shaheed'. Maybe okay, who knows, Allah knows better.

    ReplyDelete
  2. மினாரத் இருந்தால் தான் பள்ளிவாசல் என்று அல்லாஹ் ஒத்துக்கொள்வானா?
    இந்த மினாரத்துக்கு செலவு செய்யும் பணத்தில் முஅத்தினுக்கோ இமாமுக்கோ அல்லது வீடற்ற ஜமாஆத்தினருக்கோ ஒரு வீட்டைக்கட்டிக்கொடுப்பதனையோ அல்லது தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கு உதவுவததையோ தான் அல்லாஹ் விரும்புவான் என்பது என் கருத்து.

    ReplyDelete
  3. பித்்னாவாக மாறும்்போது மினாரத்் அவசியமில்்லை.எல்்லாவிடயத்்திலும்் றசூல்் ஸல்்லல்்லாஹூ (அலை) அவர்்களின்் முன்்மாதிரி இருக்்கிறது.எந்்த முன்்மாாதிரியோ வழிகாட்்டுதலோ இல்்லாத சமூகத்்தின்் செயல்்களுக்்கு அல்்லாஹ்் பதிலளிப்்பான்்.கவலைப்்படத்்தேவையில்்லை.

    ReplyDelete
  4. Well say every one
    every one know kandy "line mosque" where located. So don't any extra Idintification on the top.

    ReplyDelete
  5. Constructing a Minarath attached with a mosque is not a Shariah obligation, is not a Shariah rule. so Muslims can compromise the Minarath in this conflictual context of Sri Lanka and express their Akhlak toward the Buddhists with the purpose of making understand the Islam's nature.

    ReplyDelete

Powered by Blogger.