Header Ads



முஸ்லிம் காங்­கிரஸ் தற்­பொ­ழுது பின்­ன­டைவை எதிர்­கொண்­டுள்­ளது - பசீர் சேகுதாவூத்


(வீரகேசரி)

நான் அர­சி­ய­லி­லி­ருந்து வில­கி­ய­தாக எனது அறிக்­கையை சிலர் மிகைப்­ப­டுத்திக் கூறு­கின்­றனர். ஆனால் அது­வல்ல உண்மை. எனது முடிவும் அது­வல்ல. 

தேர்­தலில், இறங்கி வாக்­குக்­கேட்கும் சாமா­னிய அர­சி­யல்­வா­தி­யாக இல்­லாமல் அர­சியல், சமூக செயற்­பாட்­டா­ள­ராக விஸ்­வ­ரூ­ப­மெ­டுக்கும் முடிவே அது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தற்­பொ­ழுது பின்­ன­டைவை எதிர்­கொண்­டுள்­ளது. 

கட்­சியின் ஆரம்­ப­க­ர்த்­தா­வான அஷ்­ரப்­பிற்­கு இருந்த கட்சி மீதான பற்று தற்­போ­தைய தலை­மை­யி­ட­மில்லை. அஷ்ரப் ஆரம்­ப­கர்த்தா ஆனால் ஹக்­கீமோ இணக்­கத்­த­லைவர். அஷ்ரப் ஆல­மரம் என்றால் ஹக்கீம் நாணல். அஷ்­ர­புக்­கிருந்த மக்கள் பிரக்­ஞையும் ஸ்தாபனப் பற்றும் ஒப்­பீட்­ட­ளவில் ஹக்­கீ­முக்குக் குறைவு. அஷ்ரப் தந்­தை­யென்றால் ஹக்கீம் சிறிய தந்தை. 

இவற்­றையே இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான வேறு­பா­டாக நான் இனங்­காண்­கின்றேன். 

அஷ்ரப் இக்­கட்­சியை ஸ்தாபித்­ததால் இக்­கட்­சியை தன் சொந்தப் பிள்­ளைபோல் பார்த்­துக்­கொண்டார். அக்­கட்­சிமேல் அவ­ருக்கு இணை­யற்ற பாசமும் பற்றும் செய­லூக்­கமும் காணப்­பட்­டது. 

அத்­துடன் கட்­சியின் பின்­ன­டைவில் அவ­ருக்கு மிகுந்த வேத­னையும் கட்­சியை சரி­வி­லி­ருந்து மீட்­பதில் துரி­த­மாக செயற்­படும் ஆற்­றலும் அவ­ரிடம் காணப்­பட்­டது. அந்­த­ளவு ஆற்றல் இந்தத் தலை­வ­ரிடம் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பசீர் சேகு­தாவூத் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார்.

4 comments:

  1. பஷீர் சேகு தாவுத் அவர்களே, சகோதரர் ஹக்கீம் அவர்கள் நாணல் அல்ல ஒட்டுண்ணி தாவரம் ( parasitic plant : மரங்கள் மீது படர்ந்து வளர்ந்து அவற்றின் சத்தினை உறிஞ்சும் ஒட்டுண்ணி வகை தாவரம். ஏனைய காங்கிரஸ் எம்பிமாரும் அவ்வாறுதான் ) நாணலாவது நிலத்தில் வளரும். நீங்கள் இப்படி ஒப்பீடுகள் செய்வதை விட அவரது தலைமைத்துவதினால் எடுக்கப்பட்ட முடிவுகள் ( ராஜா பக்ஸவுடன் சேர்ந்து கொண்டது, 18 வது திருத்த சட்டம், கசினோ சட்ட மூலம், தெவிநுமுகம சட்ட மூலம். ஸ், ஹலால் பிரச்சினை...Etc....) . தேர்தல் காலங்களிலும், நெருக்கடி காலங்களிலும் கைமாறுப்பட்ட பணங்கள், பதவிகள்... போன்ற இன்னோரன்ன விடயங்களும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். உண்மையான காங்கிரஸ் போராளிகளும் மக்களும் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.

    ReplyDelete
  2. பஷீர் சேகு தாவுத் அவர்களே, சகோதரர் ஹக்கீம் அவர்கள் நாணல் அல்ல ஒட்டுண்ணி தாவரம் ( parasitic plant : மரங்கள் மீது படர்ந்து வளர்ந்து அவற்றின் சத்தினை உறிஞ்சும் ஒட்டுண்ணி வகை தாவரம். ஏனைய காங்கிரஸ் எம்பிமாரும் அவ்வாறுதான் ) நாணலாவது நிலத்தில் வளரும். நீங்கள் இப்படி ஒப்பீடுகள் செய்வதை விட அவரது தலைமைத்துவதினால் எடுக்கப்பட்ட முடிவுகள் ( ராஜா பக்ஸவுடன் சேர்ந்து கொண்டது, 18 வது திருத்த சட்டம், கசினோ சட்ட மூலம், தெவிநுமுகம சட்ட மூலம். ஸ், ஹலால் பிரச்சினை...Etc....) . தேர்தல் காலங்களிலும், நெருக்கடி காலங்களிலும் கைமாறுப்பட்ட பணங்கள், பதவிகள்... போன்ற இன்னோரன்ன விடயங்களும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். உண்மையான காங்கிரஸ் போராளிகளும் மக்களும் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.

    ReplyDelete
  3. பாதிக்கப்பட்டவரின் உளக் குமுறல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  4. While Mulims are struggling to preserve their Identity these fools are fighting each other.what a unfortunate muslim society.

    ReplyDelete

Powered by Blogger.