ராஜிதவின் மகன், வைத்தியர்களை இழிவுபடுத்தியதாக முறைப்பாடு
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரட்னவிற்கு எதிராக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இந்த இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
சங்கத்தையும் சங்கத்தின் உறுப்பினர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சதுர சேனாரட்ன கருத்து வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சபாநாயகரிடம், சதுர குறித்து முறைப்பாடு செய்யப்படும் என கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற சங்கத்தின் செயலாளர் டொக்டர் நலின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
மேலும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கடிதமொன்றும் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த அச்சுறுத்தல் கடிதத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினரின் அச்சுறுத்தலுக்கும் இடையில் தொடர்புண்டா என விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் ஒருவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதன் பொறுப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென டொக்டர் நலின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

Post a Comment