செல்பீயால் வந்த விபரீதம்
கோகர்னாவில் லைட் ஹவுஸில் செல்பீ எடுக்க முயற்சிசெய்த ராஜஸ்தான் மாநில சட்ட கல்லூரி மாணவி விழுந்து உயிரிழந்தார்.
ஸ்மார்ட்போன்கள் படையெடுப்புடன் ’செல்பீ’ மோகமும் பெரும்பாலானோரை தொற்றிக் கொண்டு உள்ளது. தன்னைத் தானே புகைப்படம் எடுத்து (செல்பீ) சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது என்பது இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் புதிய கலாச்சாரமாக மாறிஉள்ளது. இறந்த சடலத்துடனும் புகைப்படம் எடுக்கும் கலாச்சாரமும் இதனால் பெருகத்தொடங்கி உள்ளது. ஒருபுறம் வேடிக்கையான நிகழ்வாக ஓடிக்கொண்டுக்கு இருக்கும் ’செல்பீ’யின் பாதையில் மறுபுறம் அலாதி பிரியம் கொண்டவர்கள் உயிர்களை இழந்து வருகின்றனர். துப்பாக்கியுடன் ’செல்பீ’ எடுத்தல் என விபரித ஆசை கொண்டவர்கள் எதிர்பாராத விபத்துக்களால் விலைமதிப்பில்லா உயிரை இழந்து விடுகின்றனர்.
எத்தனையோ எச்சரிக்கை செய்திகள் வெளியாகியும் இது நின்றபாடில்லை. இதன் வரிசையில் இப்போது சட்ட கல்லூரி மாணவி உயிரிழந்து உள்ளார்.
ராஜதான் மாநிலம் ஜோத்பூர் தேசிய சட்டப்பல்கலைக்கழக மாணவி பிரனிதா மேக்தா தன்னுடைய தோழிகளுடன் கர்நாடக மாநிலம் கோகர்னாவிற்கு சுற்றுலா வந்துஉள்ளார். தோழிகளுடன் நேரத்தை செலவிட்ட அவர் அங்குஉள்ள 300 அடிஉயர லைட் ஹவுசிற்கு சென்று உள்ளார். அப்போது தன்னை நேர்த்தியாக ’செல்பீ’ எடுத்துக்கொள்ள முயற்சி செய்து உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டார். இச்செய்தியை அவருடைய தோழிகள் மீனவர்களிடம் தெரிவித்து உதவியை நாடிஉள்ளனர். மீனவர்கள் உதவிசெய்ய முன்வந்தும் அவர் சடலத்தையே மீட்க முடிந்தது. மேக்தா மும்பை, கோவா பயணத்தை முடித்துக் கொண்டு கோகர்னா சென்று உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆபத்தான பகுதியை எடுத்துரைத்தும் இதுபோன்ற துரதிஷ்டவசமான சம்பவம் நேரிட்டு உள்ளது.
உலகில் கடந்த 2015-ம் ஆண்டு அதிகப்பட்சமாக ’செல்பீ’ எடுக்க முயற்சிசெய்து இந்தியாவில் 27 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று தகவல்கள் கூறிஉள்ளன.

Post a Comment